Monday, February 24, 2020

நல்லது, கெட்டது செய்கிறார்கள்.


  குற்றங்களுக்கு தண்டனை உண்டு என்று தெரிந்தும், குற்றங்கள் செய்வது ஏன்?         

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028

நல்லது, கெட்டது இரண்டையும் செய்கிறார்கள்!

மக்கள் வாழ்வில், நல்லது, கெட்டது இரண்டையும் செய்கிறார்கள். அதற்கு தகுந்தாற்போல, அவர்களுக்கு, இன்பமும், துன்பமும் கிடைக்க செய்ய வேண்டும். விதி என்னும் அமைப்பின் மூலம் இறைவன் அதை நடைமுறைப்படுத்துகிறான். அந்த விதிக்கு, நடைமுறைப்படுத்த இரண்டு நிர்வாகிகளை நியமிக்கிறான். அவர்கள்தான் ஒன்று அறியாமை மற்றொன்று அறிவுடைமை.

டி.வி, செய்திதாள்களின் மூலம் தவறு என்று அறிந்திருந்தும், விதியால், அறியாமை, தவறுகள் செய்ய மக்களை தூண்டுகிறது. அப்படி தவறு செய்பவர்கள்தான், ஆசிரியர்கள் பிள்ளைகளை அடிப்பது, பாலியல் குற்றங்களைச் செய்வது, திருடுவது, கொலை செய்வது. அவ்வாறு செய்வதின் மூலம் துன்பங்களை அனுபவிக்கிறார்கள். அறிவுடமை, நல்லதை செய்ய தூண்டுகிறது. அவ்வாறு நல்லதைச் செய்யும்போது இன்பத்தை அனுபவிக்கிறார்கள்.

அறியாமை குறைவதற்கு தகுந்தாற்போல, அறிவுடமை அதிகரித்து தவறுகள் குறைந்து, நல்லதுகள் அதிகரிக்கும். அறியாமையை குறைப்பதற்கு, ‘தலைக்கண’ மருத்துவ மனபயிற்சி செய்ய வேண்டும். கண்களை மூடி, தலையிலிருக்கும் கணத்தை கவனிக்க வேண்டும். கணம் இறங்கிவிடும். தினசரி காலையில் செய்ய வேண்டும். செய்ய, செய்ய, அறியாமையும் குறைந்துகொண்டே வரும். உங்களது துன்பங்களும் குறைந்துகொண்டே வரும். வாழ்வில் வளம் பெறலாம். 

அரோமணியின் 11 விதிகளும் உடல்மன நலத்தை கொடுத்து அறியாமையை அகற்ற உதவும்.

                          ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.


Friday, February 21, 2020

சேராத உணவு!


   4 மாதங்கள் இவைகளை தவிர்த்துவிட வேண்டும்! -இம

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028


உடல், ஆண்டு பராமரிப்புக்காக, குளிர்காலத்தை தேர்ந்தெடுத்திருக்கிறது. குளிர்கால பருவமானது, தனது குளிர்ச்சியைக் கொண்டு உடலை சுருங்கச்செய்து, தேங்கிய கழிவுப்பொருட்களை உடலைவிட்டு வெளியேறச்செய்கிறது. அப்படி வெளியேறும் கழிவுப்பொருட்கள் கெட்ட நீர், வாய்வு, சளி, நெஞ்சை அடைத்துக்கொண்டிருக்கும் ஏப்பம் முதலியன.

இந்தத் தருணத்தில், சேராத உணவுப்பொருட்கள் மேற்குறிப்பிட்ட கழிவுப்பொருட்களை அதிகரிக்க செய்யும். அது உங்களுக்கும் அதிக சிரமத்தை கொடுக்கும். ஆகவே, உணவுப் பொருட்களில், எந்த பண்டம், குழம்பு, பிடிக்கவில்லையோ அந்த பொருளை தவிர்த்துவிட வேண்டும். நோய்களின் கடுமை குறையும்

அசைவ உணவு சாப்பிடுபவர்கள் நாட்டுக்கோழி சூப்பும் கறியும் சேர்த்துக்கொள்ளும்போது சளி நன்றாக குறையும் இளப்பும் இருக்காது. நன்றாக காய்ச்சி ஆறவைத்த தண்ணீரைத்தான் குடிக்க வேண்டும்.

இந்த காலத்தில் காலையும் மதியமும் சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் நடப்பது  மாத்திரை எடுத்துக்கொள்பவர்களுக்கும் மற்றவர்களுக்கும் விரைவில் நோய்கள் குணமாக உதவும்.

இரவில் சாப்பிட்ட பிறகு 10 நிமிடங்கள் நடைப்பயிற்சியோ, உடற்பயிற்சியோ செய்து விட்டு தூங்கபோனால், இளப்பு உள்ளவர்கள் உறிஞ்சு மருந்து எடுத்துகொள்ள வேண்டியதில்லை. இந்த காலத்தில் ‘தலைக்கண’ மம-உங்களது சுறுசுறுப்பை ஊக்குவிக்கும். மற்ற 9 அரோமணி விதிகளும் குளிர்காலத்தில் நோய்களை விரட்டுவதில் உறுதுணையாக இருக்கும்.

                       ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்.

Sunday, February 16, 2020

முக்கிய காரணம்!


சாப்பிட்டுவிட்டு உழைக்க சொல்வதற்கு மற்றொரு முக்கிய காரணம்!!-இம


சாப்பிட்டுவிட்டு உழைக்க சொல்வதற்கு மற்றொரு முக்கிய காரணம்!!-இம

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028


சாப்பிட்டுவிட்டு நடைபயிற்சி செய்யும்போது, நன்றாக செரிக்கிறது.. அவ்வாறு செரிக்கும்போது கழிவுப்பொருட்கள் கழிக்கபடுகின்றன. அவ்வாறு கழிக்கபடும் கழிவுப்பொருட்கள், கெட்டநீர், வாய்வு, சளி, நெஞ்சை அடைத்துக்கொண்டிருக்கும் ஏப்பம் முதலியன. நடக்கும்போது அந்த கழிவுப்பொருட்கள் வெளியேறுகின்றன.  கெட்டநீரின் ஒரு பகுதி வியர்வையாக வெளியேறுகிறது.

நடைபயிற்சி செய்யாவிட்டால், வியர்வையாக வெளியேறும் கெட்ட நீர் அடைபட்டு, மறுநாள் காலையில் உடல் முழுவதும் நீர்க்குமில்கள் ஏற்பட்டு, அந்த நீர்க்குமில்களை உடைக்க, உடலானது அரிப்பை உண்டாக்குகிறது. நீங்கள் அரிப்பினால் சொரண்டும்போது, நீர்க்குமில்கள் உடைபட்டு, கெட்டநீர் வெளியேற்றபடுகிறது.  அதேபோல, மற்ற கழிவுப்பொருட்களால், தும்மல், மூக்கடைப்பு, மூக்கில் நீராக ஒழுகுதல், நெஞ்சில் சளி கட்டுதல் முதலிய நோய்கள் மறுநாள் தோன்றுகின்றன.. அதனால் பசியின்மை, மலசிக்கல் அரிப்பு மற்றும் மேற்கூறிய நோய்கள் முதலியன வராமலிருக்க நீங்கள் சாப்பிட்ட பிறகுதான் நடக்க வேண்டும்.

சாப்பிட்ட பிறகு நடக்காமல், அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை செய்யும்போது, செரிக்கிறது. ஆனால் செரிக்கும்போது உற்பத்தி செய்யபடும் கழிவுப்பொருட்கள் வெளியேறுவதில்லை. அதனால் மேற்கூறிய  நோய்கள் வந்துவிடுகிறது.

வெறும் வயிற்றில் நடக்கும்போது, வயிற்றில் உணவில்லை, அதனால் செரித்தலில்லை; ஆற்றலும் இல்லை; கழிவுப்பொருட்களின் உற்பத்தியும் இல்லை. நடப்பதற்கு வேண்டிய ஆற்றலை, உடல், செல்களின் சேமிப்பிலிருந்து எடுத்துக்கொள்கிறது. ஆற்றலின் சேமிப்பு குறைவதால், உடல் பலவீனமாகி,  நோய்கள் பற்றுகின்றன.


                     ஹீலர் அரோமணி 
தயவுசெய்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.

Friday, February 7, 2020

அரசே ஊக்கபடுத்தலாமா?-

  அரசே அறியாமையை ஊக்கபடுத்தலாமா?-இம            

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;709

  
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகமே அறிவிப்பு செய்திருக்கிறது (5-2-2020 தேதி தினதந்தி). நல்ல நேரம் கெட்ட நேரம் என்பதே கிடையாது. இறைவன் கொடுத்த 24 மணி நேரமும் நல்ல நேரம்தான்.

நேரம் நமக்கு எப்படி கிடைக்கிறது? பூமியின் நிறை (Mass) 6 x 1024 kilograms (6,000,000,000,000,000,000,000,000 kilograms).இவ்வளவு நிறையைக் கொண்ட பூமி தன்னைத் தானே அண்ட வெளியில் சுற்றி 24 மணி நேரத்தைக் கொடுக்கிறது. ஒரு நொடியை இழந்துவிட்டால், அதை திரும்பப் பெற முடியாது. ஒரு மணி நேரத்தை இழந்து விட்டால், அந்த நேரத்தில் செய்ய வேண்டிய வேலையை இழக்கிறோம்; வருவாயை இழக்கிறோம்; வயது கூடிவிடுகிறது. ஒரு கோடி ரூபாயை இழந்துவிட்டால் திரும்ப பெற்றுவிடலாம். திரும்ப பெறகூடிய ஒன்றுக்காக, திரும்ப பெறமுடியாத நேரத்தை, நேரம் சரியில்லை என்று நேரத்தை இழப்பதைப் போன்ற அறியாமை வேறு எதுவும் இல்லை.

தீமையும் நன்மையும் பிறர்தருவதால் வருவதில்லை என்று தமிழ்புலவன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாலே சொல்லியிருக்கிறான். அதாவது, தீமையும் நன்மையும் கெட்ட நேரம், நல்ல நேரத்தால் வருவதில்லை. அவரவர் செய்த பாவ புண்ணியங்கள் விதியில் அடக்கமாகி, அதன்படிதான் நமக்கு இன்ப துன்பங்கள் ஏற்படுகின்றன. அரசுதான் இந்த பாடலை பாடமாக சேர்த்திருக்கிறது. அந்த அரசே அறியாமை கருத்துக்களை பரப்பலாமா!.

அறியாமை அகல ‘தலைக் கண” மருத்துவ மனபயிற்சியை தினசரி காலை ஒரு வேளை செய்தாலே போதும். அறியாமை அகன்று அறிவுடமை பெருகும். அறிவுடமை பெருகிவிட்டால், எல்லா நேரமும் உங்களுக்கு பயனுள்ள நேரமாக மாறிவிடும்.

அறியாமை அகன்றதால் இறைவன் எனக்களித்த பரிசுதான் அரோமணியின் 11 விதிகள்.
              ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.