Friday, January 17, 2020

இரட்டை துப்பாக்கி!!

நோய்களை சுட்டுத்தள்ளும் இரட்டை குழல் துப்பாக்கி! -இம

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.


செல் எண்கள்: 9442035291;7092209028.

“தலைக்கண மருத்துவ மனபயிற்சி” செய்வதின் மூலம் தலைக்கணம், உடல் சோர்வு, மனசோர்வு, மயக்கம், கிறுகிறுப்பு, உடல் வலி, மூட்டுவலி, தும்மல், மூக்கில் நீராக ஒழுகுதல், அறியாமை, வேலைத்திறமையின்மை முதலிய நோய்கள் குணமாகின்றன.


காலையிலும் மதியமும் சாப்பிட்டபிறகு நடைபயிற்சி செய்வது, செரித்தல் கோளாறு,, பசி இல்லாமை, மலசிக்கல் ஆகிய மிக முக்கியமான நோய்களை குணபடுத்துகிறது. செரித்தல் சரியாகி விட்டால் பிறகு எந்த நோயும் உடலுக்குள் நுழைய வாய்ப்பில்லாமல் ஆக்கிவிடுகிறது.

மற்ற அரோமணி 9 இயற்கை விதிகளும் மேலே கூறிய இரட்டை குழல் துப்பாக்கிக்கு தோட்டாக்களாக இருந்து செயல்பட்டு நோய்களை சரமாரியாக சுட்டுத்தள்ளுகின்றன. சுட்டுத்தள்ள முடியாத நோய்கள் என்று எதுவும் இல்லை.

           ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள்.

Wednesday, January 15, 2020

குளிர்காலங்களில் உடலின் பராமரிப்பு!

               
 “Feed the Cold”-ன் பொருள் தரும் சிகிச்சை-இம

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை. செல் எண்கள்: 9442035291;7092209028.

குளிர்காலங்களில் உடலின் பராமரிப்பு!

குளிர்காலங்களில்தான், உடல், தனது பராமரிப்பு வேலையைச் செய்கிறது. உடலில் கடந்த ஓராண்டாக தேங்கியிருந்த கழிவுப்பொருட்களை, தும்மல், மூக்கில் நீராக ஒழுகுதல், இருமல், சளி, கெட்ட நீர் வெளியேற அரிப்பு ஆகியவற்றால் உடல் வெளியேற்றுகிறது.

அந்த காலங்களில், சளி, இளப்பு உள்ளவர்களுக்கு திடீர், திடீரென்று இரவு பகல் என்று இல்லாது இருமல் சத்தத்துடன் வரும். நீங்கள் காரணம் தெரியாமல் குழப்பத்தில் இருப்பீர்கள். அந்தமாதிரி வந்தால், உங்கள் வயிறு காலியாக இருக்கிறது; அந்த காலி வயிற்றில் சளி சேர்ந்திருக்கிறது; அந்த சளியை வெளியேற்றத்தான், இருமல் ஏற்படுகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்தமாதிரி சமயங்களில், சர்க்கரை நோயுள்ளவர்கள், மயக்கம் வருவது போல தெரிந்தால், சிறிதளவு சீனியையோ அல்லது கடலை மிட்டாயோ சேர்த்துக்கொள்வதைப்போல நீங்கள் ஒன்று செய்ய வேண்டும். சளியை உண்டுபண்ணாத தின்பண்டங்கள் அவித்த பேரிட்சம் பழம் உட்பட சிலவற்றை சிறிதளவு எடுத்துகொள்ள வேண்டும். உடனே இருமல் நின்றுவிடும்.

பிறகு சளி இருமல் சத்தம் இல்லாமல் சிறிது சிறிதாக உணவு சாப்பிடும்போதும்,, மற்ற சமயங்களிலும் வெளியேறிவிடும். இப்படித்தான் “Feed the Cold” என்ற பழமொழி புழக்கத்தில் வந்திருக்கிறது.

சாப்பிட்ட பிறகு உழைப்பு அவசியம் தேவை. அது நோய்களிலிருந்து உங்களை கவசமாக இருந்து காப்பாற்றும். மருத்துவ மனபயிற்சிகளும், மற்ற அரோமணியின் 10 இயற்கை விதிகளும் நோய்கள் விரைவில் குணமாக உறுதுணையாக இருக்கும்.

                 ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துகளை பதிவு
செய்யுங்கள்.


Tuesday, January 14, 2020

திறன் குறைவதற்கு காரணிகள்


  
உழைக்கும் திறன் 13%- லிருந்து 200%-க்குக் கூட்டுவதற்கு சிகிச்சை!-இம

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

செல் எண்கள்: 9442035291;7092209028.

திறன் குறைவதற்கு காரணிகள் 

உழைப்புத்திறன் குறைவதற்கு பல காரணிகள் இருந்தாலும், மிக முக்கியமான காரணிகள் நான்கு.  உடல் சோர்வு, மனச்சோர்வு, கிறுகிறுப்பு மற்றும் மயக்கம். இந்த நான்குமே, மூளையில் சேரும் வாய்வு, சளி, கெட்ட நீர் போன்ற கழிவுப்பொருட்கள்தான். இந்த கழிவுப்பொருட்கள்தான், மூளையின் இயக்கத்தை இயங்கவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறது. அது உடலின் ஒட்டுமொத்த திறனையும் 13% ஆக குறைத்துவிடுகிறது.

“தலக்கண மருத்துவ மனபயிற்சி” யில் கண்களை மூடி, தலையில் தோன்றும் தலைக்கணத்தை கவனித்துக்கொண்டிருங்கள். எண்ணங்களை நீடிக்கவிடாதீர்கள். தொடர்ந்து செய்யும்போது, மம-ஆனது, கழிவுப்பொருட்களை வெளியேற்றிவிடுகிறது. வெளியேறியவுடன்  உலகமே புதிய உலகமாக உங்களுக்கு தெரியும்; சுறு சுறுப்பாக இயங்குவீர்கள். நேரத்தைப் பார்க்காமல் உழைப்பீர்கள். அந்த நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

காலை, மதியம் சாப்பிட்ட பிறகு நடைபயிற்சி செய்வதின்மூலம் உழைக்கும் திறன் உடலுக்கும் வந்துவிடுகிறது. மற்ற அரோமணியின் விதிகளும் உழைக்கும் திறனை அதிகரிக்க அவசியம் தேவைபடுகிறது. மேற்கூறிய அனைத்தும் சேர்ந்து, உங்கள் உழைக்கும் திறனை 13% லிருந்து 200% கூட்டுவதை நடைமுறையில் காணலாம்.

                       ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.

Saturday, January 4, 2020

இரவில் சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி

இளப்புக்கு (Wheezing) இரவில் சிகிச்சை! இம
          

                   அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: வேலை செய்துகொண்டே நோய்களை குண

படுத்தலாம். செல் எண்கள்: 9442035291;7092209028.

இரவில் சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி

இரவில் சாப்பிட்டவுடன் தூங்கசென்றுவிடாமல், பகலில் செய்யும் நடைப்பயிற்சி நேரம் அரை மணி நேரமென்றால், அதில் 3-ல் ஒரு பங்கான 10 நிமிடங்கள் உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி செய்துவிட்டு தூங்கவேண்டும். குளிர்காலத்தில், பனியில் செய்யாமல், அறைக்குள் செய்ய வேண்டும்.

உறிஞ்சு மருந்து (Inhaler), அடைபட்ட காற்று குழாயை திறந்து விடுகிறது; அதனால், உங்களுக்கு சுலபமாக மூச்சுவிட முடிகிறது. அதே பணியைத்தான் உடற்பயிற்சியும் செய்கிறது. உடற்பயிற்சியின்போது ஏற்படும் மேல்மூச்சு, கீழ்மூச்சானது, அடைபட்ட காற்று குழாயை திறந்து விடுகிறது; மேலும், செரித்தல் ஆவதால் சளியின் உற்பத்தியும் குறைகிறது; அதனால், இரவில் உங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் நன்கு தூங்கி எழுந்திருப்பீர்கள்.

படுத்துக்கொண்டே, மார்பை நோக்கிச் செய்யும் மருத்துவ மனபயிற்சி செய்து, மார்பில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்றலாம். எழுந்தவுடன் காலையிலும் இதேபோல, சளியை வெளியேற்றலாம். அரோமணியின் 11 இயற்கை விதிகளை கடைப்பிடிக்கும்போது, சளி உற்பத்தியை குறைத்து உடலை வலிமைப்படுத்தும்.

                            
            ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவுசெய்யுங்கள்.