Wednesday, December 25, 2019

முதல் விதி: அளவாக சாப்பிடுவது

ஆரோக்கியத்திற்கு அரோமணியின் 11 விதிகள்!-இம
     

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

முதல் விதி: அளவாக சாப்பிடுவது

முதல் விதி: அளவாக சாப்பிடுவது; ஒவ்வொரு கவளத்தையும் 30  முறை மென்று விழுங்க வேண்டும்; மூன்று ஏப்பங்கள் வரும்; மூன்றாவது ஏப்பத்துக்கு பிறகு வயிறு மந்தமாக இருந்தால், இரண்டு ஏப்பத்தோடு நிறுத்திவிடுங்கள்.
2-வது விதி: இயற்கை உணவு நோய்களை தருகிறது. ஆகவே பழங்களை இடலி பானயில் 2 அல்லது 3 நிமிடங்கள்  ஆவியில் வேகவைத்து சாப்பிட வேண்டும்.
3-வது விதி; உணவு சூடாகவோ, குளிர்ச்சியாகவோ இருக்க கூடாது.
4-வது விதி; தாகம் எடுத்தபிறகுதான் தண்ணீர் குடிக்க வேண்டும்.
5-வது விதி: பசி எடுத்தபிறகுதான் உண்ண வேண்டும்.
6-வது விதி: மலம் முழுவதும் வெளியேறிவிட்டதை உறுதி செய்ய வேண்டும்.
7-வது விதி: காற்றோட்டமான அறையில் தூங்க வேண்டும்.   கொசுவலை, கொசுவத்தி பயன்படுத்த கூடாது.
8-வது விதி: பகலில் தூங்க கூடாது.
9வதுவிதி: உடலிலுள்ளதுவாரங்கள்அடைபடக்
கூடாது.
10-வது விதி. காலையிலும் மதியத்திலும் சாப்பிட்ட பிறகுதான்   நடக்க வேண்டும்.
11-வது விதி: காலையிலும் மாலையிலும் 20 நிமிடங்களுக்கு மார்பை  அல்லது தலையைக் கவனித்து,மருத்துவ மனபயிற்சி செய்ய வேண்டும்.  
               ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு
செய்யுங்கள்.

Tuesday, December 24, 2019

எப்பொழுதும் மகிழ்ச்சி!


   எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறேனே! - இம         

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: வேலை செய்துகொண்டே நோய்களை குணபடுத்தலாம்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

A 25-TM
அதற்கு பரிகாரம் என்ன? குழந்தைகள் பிறக்கும்போதும், திருமணங்கள் கைகூடும்போதும், வேலைவாய்ப்பு கிடைக்கும்போதும், பதவி உயர்வு கிடைக்கும்போதும், அந்தஸ்து உயரும்போதும் மகிழ்ச்சியடைகிறீர்கள். இன்று இந்த பதவியில் இருக்கிறேன் என்றால் அதற்கு நான் ஏதோ புண்ணியம் செய்திருக்கிறேன் என்று சொல்கிறீர்கள். இந்த மகிழ்ச்சியை என்னால் தாங்கமுடியவில்லை, அதற்கு பரிகாரம் காணவேண்டும் என்று எவரும் பரிகாரத்தைத் தேடிப் போவதில்லை! நீங்கள் செய்த நல்ல செயல்களுக்கு தகுந்தாற்போல உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செயல்கள் நடக்கின்றன

அதேபோலதான், நீங்கள் செய்த கெட்ட செயல்களுக்குத் தகுந்தாற்போல, துன்பச் செயல்கள் நடக்கின்றன!. இதற்கு மட்டும் பரிகாரத்தைத் தேடி மக்கள் ஏன் ஓடுகிறார்கள். உங்களுக்கு மகிழ்ச்சிதரக்கூடிய செயல்களைத் தடுக்க எப்படி எவராலும் முடியாதோ, அதேபோல உங்களுக்கு துன்பம் தரக்கூடிய செயல்களை எந்த பரிகாரத்தாலும் தடுக்க முடியாது!

அதற்கு ஒரே ஒரு பரிகாரம் கவனவாழ்க்கை வாழ்வதுதான். கடந்த காலத்தையும் எண்ணாமல், எதிர்காலத்தையும் எண்ணாமல், எப்பொழுதும் செயல்களில், வேலைகளில் கவனத்தைச் செலுத்துவதுதான். அவ்வாழ்க்கையில் இறைவனின் பாதுகாப்பில், நேரடி பார்வையில் வந்துவிடுகிறீர்கள். அதன்மூலம் ஊழ்வினை தாக்கத்தை எளிதில் எதிர்கொள்ள முடியும். கவனவாழ்க்கைக்கு மாறுவதற்கு, மருத்துவ மனபயிற்சி உறுதுணையாக இருக்கும்.
                            
         ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்தை பதிவிடுங்கள்.

Monday, December 9, 2019

!காலையில் எழுந்தவுடன் பயம்

காலையில் ஏற்படும் பயத்தை ஒழிப்பீர்!
    Aromani Research Center (Without Medicine) Hospital. Special feature: The patient who enters into the hospital, emerges as a Doctor. Cell Nos: 9442035291; 7092209028. 

A 26
காலையில் படுக்கையைவிட்டு எழுந்தவுடன், ஒரு மாதிரியான பயம்

காலையில் படுக்கையைவிட்டு எழுந்தவுடன், ஒரு மாதிரியான பயமும், கலக்கமும் இருப்பதை எல்லோரும் உணர்ந்திருப்பீர்கள்; காரணம் என்ன? எழுந்தவுடன் ஏற்படும் தலைக்கணம், தலைவலி, தும்மல், மூக்கடைப்பு, மூக்கில் நீராக ஒழுகுதல், சளி, காதிரைச்சல்,,பல்வலி, தொண்டை, கட்டிக்கொள்தல், நெஞ்சில் சளி கட்டுதல், வயிற்றுவலி, கால் நரம்புகளை சுண்டி இழுத்தல், மனவழுத்தம், மலம், சிறுநீர் போன்ற தொந்தரவுகள் என்னும் நோய்களில் ஒன்றிரண்டை நீங்கள் எதிர்கொண்டிருப்பீர்கள். மேற்கூறியவை அனைத்தும் கழிவுப்பொருட்களாகும்.

நீங்கள் ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும்போதுதான், உடல் பராமரிப்பு வேலை செய்கிறது. அந்த வேலை செய்து முடித்தவுடன் கழிக்கபட்ட கழிவுப்பொருட்கள்தான் மேலே சொன்ன கழிவுப்பொருட்கள் என்னும் நோய்களாகும். அவற்றைக் கண்டு பயப்படவேண்டாம்.

தலக்கணம், தலைவலிக்கு தலையை கவனிக்கவும்; தும்மல் முதல் சளி வரை மூக்கைக் கவனிக்கவும்;  காதிரைச்சலுக்கு காதைக் கவனிக்கவும். பல்லீரல் வலிக்கு விரலால் அழுத்தி அதை கவனிக்கவும்; தொண்டைக் கட்டுக்கு தொண்டையை கவனிக்கவும்; மார்புச் சளிக்கும் மனவழுத்தத்திற்கும் மார்பைக் கவனிக்கவும்; வயிற்றுவலிக்கு வயிற்றைக் கவனிக்கவும்; சுண்டி இழுக்கும் காலைக் கவனிக்கவும். கண்களை மூடித்தான் மம- செய்ய வேண்டிய கட்டாயமில்லை; விழித்துக்கொண்டேயும் மம- செய்யலாம். நலம் பெறுவீர்கள். கவலையை விடுங்கள்.
         ஹீலர் அரோமணி


,  ,