Saturday, November 30, 2019

இளப்புக்கு காரணம் மலசிக்கல்

இளப்பு (Wheezing)-காரணம்-சிகிச்சை! -இம
              அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

           இளப்புக்கு காரணம் மலசிக்கல்

இளப்புக்கு காரணம் மலசிக்கல்- அதுவும் குளிர்காலத்தில், மலசிக்கல் இருக்கும்போது, சிறிது அதிகமாக சாப்பிட்டாலும், பழங்களை வேகவைக்காமல் சாப்பிட்டாலும், தாகம் எடுக்காமல் நீர் குடித்தாலும், பசி எடுக்காமல் சாப்பிட்டாலும், காற்றோட்டமில்லாத அறையில் தூங்கினாலும், கொசுவலைக்குள் தூங்கினாலும், பகலில் தூங்கினாலும், உடலில் உள்ள வியர்வைத்துவாரங்கள் அடைபட்டாலும், உணவுக்கு தகுந்த உழைப்பு இல்லாவிட்டாலும் மனவழுத்தத்தை போக்க நடவடிக்கை எடுக்காவிட்டாலும் தும்மல், மூக்கடைப்பு, மூக்கில் நீராக ஒழுகுதல், சளி, இளப்பு கட்டாயம் ஏற்படும். மேலும் குளிர்காலம் உடல், தன்னை, பராமரிப்புக்கு உடபடுத்தி கழிவுப்பொருட்களை வெளியேற்றும் காலம்.

இதற்கு சிறந்த தீர்வு, காலையிலும் மதியமும் சாப்பிட்டபிறகு நடைப்பயிற்சி செய்வதுதான். மேலும் காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும் மார்பு,  மூக்கு ஆகியவற்றை கவனித்து செய்யகூடிய மம-வை செய்து சேர்ந்திருக்கிற சளியை அப்புறபடுத்த வேண்டும். அப்பொழுதுதான் இரவில், மேற்கூறிய தொந்தரவுகள் இல்லாமல் நல்ல தூக்கம் தூங்க முடியும்.  மேலே குறிப்பிட்டபடி, மற்ற வாழ்வியல் விதிகளையும் கடைப்பிடிக்கும்போதுதான், உடல் ஆற்றல் பெற்று, கழிவுப்பொருட்கள் குறைந்து இளப்பிலிருந்து விடுபடுவீர்கள்.

                                   ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

Friday, November 29, 2019

மூளையும், கண்களின் பார்வை நரம்புகளும்


    பார்வை சரியாக தெரிய-சிகிச்சை-இம

                அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

A 28-மம 1

மூளையும், கண்களின் பார்வை நரம்புகளும்தான் பார்வையை அளிக்கின்றன
  
மூளையும், இரண்டு கண்களின் பார்வை நரம்ளும்தான் பார்வையை அளிக்கின்றன. இரண்டிலும் வாய்வு, சளி, ஏப்பம், போன்ற கழிவுப்பொருட்கள் தேங்கிவிடுகின்றன. அவைதான் உங்களது பார்வைதிறனை குறைத்துவிடுகிறது.

உடல், தூக்கத்தில் அவைகளை அகற்றுகிறது. ஆனால் தற்கால டி.வி. கம்ப்யூட்டர், செல் போன் போன்ற கருவிகளின் அதிக அளவு பயன்பாட்டினால், அதிக அளவு கழிவுப்பொருட்கள் சேர்ந்துவிடுகின்றன, அகற்றபடாதவற்றை “தலைக்கண மருத்துவ மனபயிற்சி” மூலம்தான் அகற்ற வேண்டும்.

கண்களை மூடுங்கள்; எண்ணமில்லாமல் சிறிது நேரம் இருங்கள். தலையை சில நொடிகள் மனகண்ணால் பாருங்கள்; தலைக்கண வலி வெளிப்படும். அதை வைத்து, வலி தீரும்வரை மம-செய்யுங்கள். இருவேளையும் செய்யுங்கள்.

செரித்தல் நன்றாக இல்லாமல் எந்த நோயையும் குணபடுத்த முடியாது. ஆகவே காலையும் மாலையும் சாப்பிட்டபிறகு நடங்கள்.  அதேபோல,  மற்ற அரோமணியின் 9 விதிகளும் பங்கு வகிக்கின்றன என்பதையும் மறந்துவிட கூடாது.

                          ஹீலர்[அரோமணி 
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

 [U1]

Wednesday, November 13, 2019

தஞ்சம் யாரிடம்?


     குளம், குட்டை, கண்மாய்கள் நீரால் நிரம்பி வழிய வேண்டுமா!

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.


மனிதன் தோன்றிய காலத்திலிருந்து வணிகம் நாகரீகத்தை வளர்த்தது; நாகரீகம் வணிகத்தையும் நோய்களையும் வளர்த்தது. நோய்கள் வணிகத்தை வளர்த்துக்கொண்டிருக்கிறது.

மகான்கள், மக்களின் வளத்திற்காக மதங்களை தோற்றுவித்தார்கள்; அம்மதங்களை வணிகம் வளர்த்துக்கொண்டிருக்கிறது; உதாரணமாக, ஆங்கிலேய கிழக்கிந்திய வர்த்தகர்கள், தங்கள் வணிக ஆட்சி நிலைத்திருக்க, கிறிஸ்தவ மதத்தை பரப்பினார்கள்;

வணிகம் தலைவர்களை வளர்த்தது; தலைவர்கள் வணிகத்தை  வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படி அனைத்துத் துறைகளிலும், பின்புலத்தில் வணிகத்தின் கைதான் ஒங்கியிருக்கிறது. அதனால், உலகின் அமைதி கெட்டு, வானிலை மாற்றங்களால், மூன்றாவது உலகபோர் தண்ணீருக்காகதான் என்ற நிலையில் வந்து நிற்கிறது.

மேற்கூறிய நிலையில், நாம் தஞ்சம் அடைய வேண்டியது ஆன்மீகத்திடம்தான். கூட்டு பிரார்த்தனை, கூட்டு மனபயிற்சி ஆகியவற்றால்தான் வானிலை மாற்றத்தை சரிசெய்ய முடியும். 

இந்து மதத்தில் உருவவழிபாட்டை குறைத்து, மனபயிற்சி வழிபாட்டை அதிகரிக்க வேண்டும். அப்பொழுதுதான், அனைவரும் எதிர்பார்க்கும் மேற்குறிப்பிட்ட நீர்த்தேக்கங்களில் நீர் நிரம்பி வழியும். 
                       ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும். 

Tuesday, November 12, 2019

பரிகார கொலை!


     எதற்கும் பரிகாரம் கிடையாது!               

                 அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.செல் எண்கள்: 9442035291;7092209028   எதற்கும் பரிகாரம் கிடையாது!


சிவகங்கையில், பரிகார பூஜைக்கு கூடுதல் பணம் தராததால், ஆத்திரம் அடைந்த சாமியார், மூதாட்டியை கொன்று, கணவரையும் காயப்படுத்திவிட்டு, நகைகளையும் எடுத்துக்கொண்டு ஓடியிருக்கிறார் சாமியார் ஒருவர். இது சமீபத்தில் வந்த செய்தி. பரிகாரம் என்பதில் உண்மை கிடையாது. எதில் உண்மை இல்லையோ அதில்தான் மக்களை ஏமாற்ற முடியும். இந்து மதம், செய்த பாவத்திற்கு பரிகாரம் கிடையாது என்று தெளிவாக சொல்லியிருக்கிறது

ஜோதிடம் அறியபட்ட காலத்தில், பரிகாரம் என்று ஒன்று இல்லை. பிற்காலத்தில், உருவ வழிபாட்டை வலிமைபடுத்தவும், நிலை நாட்டவும், ஜோதிடத்தில் இடைச் செருகலாக கொண்டுவரப்பட்டதுதான் பரிகாரம். அதனால்தான், பரிகாரங்களுக்கெல்லாம் கோவில்களுக்குப் போகச் சொல்லி ஜோதிடர்கள் பரிந்துரைப்பார்கள்.

பரிகாரம் என்பது, இந்த நிமிடம் முதல் எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் எவருக்கும் தீங்கு செய்யாதிருப்பதுதான். உயிரினங்கள் அனைத்திற்கும் தான தர்மங்கள் செய்வதும், உதவியாகவும் உறுதுணையாக இருப்பதுதான். பாவதட்டு ஏறி, புண்ணியதட்டு இறங்கும்.
                         ஹீலர் அரோமணி ..  
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.

Monday, November 4, 2019

உடலுக்கு, நோய்களை குணபடுத்தும் திறன்

உடலின் மருத்துவ மனபயிற்சியை தெரிந்து கொள்ளுங்கள்! இம

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.


சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

உடலுக்கு, நோய்களை குணபடுத்தும் திறன் கொண்டது. 

உடலுக்கு, அனைத்து நோய்களையும் குணபடுத்தும் திறன் கொண்டது. மருத்துவ மனபயிற்சியின் மூலம்தான் குணபடுத்துகிறது.

ஒரு பெண்மணி தலைவலியுடன் வீட்டு வேலை செய்து கொண்டே இருக்கிறாள். நடு நடுவே தலைவலி அவளது கவனத்திற்கு வருகிறது. மீண்டும் மீண்டும் கவனிக்கும்போது, வலி குறைந்து கொண்டே வருகிறது. அன்று மாலையில் அவள் வியக்கும்படியாக தலைவலி முற்றிலுமாக இல்லாமல் போய்விடுகிறது.

கணவன் கேட்கும்போது, “காலையில் வந்த தலைவலி, சாயங்காலமா தானாகவே போயிடுச்சுங்க” என்று மகிழ்ச்சி பொங்க சொல்லுவாள். வலி அதிகமாக இருந்தால்,  குணமாக, இரண்டு அல்லது மூன்று நாட்கள் கூட எடுக்கலாம். ஆனால், அந்த வலி தாங்க மாட்டாமல்தான், மக்கள் மருந்து மாத்திரைகளை நாடுகிறார்கள்.

 உடல் செய்யும் மருத்துவ மனபயிற்சியின் கொள்கையைதான், இரட்டை மருத்துவத்தில் மருத்துவ மனபயிற்சி மருத்துவம் பயன்படுத்தி, நாட்கணக்கில் குணமாகும் வலியை ஒரு மணி நேரத்தில் குணபடுத்துகிறது.

அரோமணியின் 11 இயற்கை விதிகளையும், மருத்துவ மனபயிற்சிகளையும் இணக்கும்போது, கேன்சர் உட்பட அனைத்து நோய்களிலிருந்தும் நலம் பெறலாம்.
                           ஹீலர் அரோமணி.

Saturday, November 2, 2019

-மறதி மூளை சம்பந்த பட்டது.


    மறதியை போக்க எளிய சிக்ச்சை!          

           அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார். செல் எண்கள்:9442035291;7092209028

A 34-மம 1
                      மறதி மூளை சம்பந்த பட்டது. 
மறதி மூளை சம்பந்த பட்டது. மூளையில், வாய்வு, கெட்ட நீர், சளி முதலிய கழிவுப்பொருட்கள் சேர்ந்து தேங்கிவிடும்போதுதான் மறதி ஏற்படுகிறது. அந்த கழிவுப்பொருட்களை நீக்கி விட்டால், மறதி நீங்கிவிடும்.

எளிய மருத்துவ மனபயிற்சி சிகிச்சை: வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள். கண்களை மெதுவாக மூடுங்கள். சில நொடிகள் எண்ணமில்லாமல் வெறுமனே மனதை வைத்திருந்துவிட்டு, மருத்துவ மனபயிற்சியை ஆரம்பிக்க வேண்டும்.கண்களை மூடியவாறே, 20 நொடிகள் வரை தலையை மனகண்ணால் கவனியுங்கள் அல்லது பாருங்கள். கழிவுப்பொருட்களால் ஏற்பட்ட தலைக்கண வலி உங்கள் கவனத்துக்கு வரும். அதையே கவனியுங்கள். வலி அதிகமாகிக்கொண்டே வந்து பிறகு குறைய ஆரம்பிக்கும். இடை இடையே வரும் எண்ணங்களை நீடிக்கவிடாமல், தொடர்ந்து வலியை கவனித்து, அது முற்றிலும் போகும்வரை மம-செய்யுங்கள். உங்களிடமுள்ள மறதி உங்களை விட்டு பறந்தோடிவிடும். இது அரோமணியின் 11-வது விதியாகும்.

காலையும் மதியமும் சாப்பிட்டபிறகு நடப்பது முக்கிய பங்கு வகிக்கிறது. இதுதான் அரோமணியின் 10-வது விதி.

அரோம்ணியின் மற்ற 9 இயற்கை விதிகள், ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும்.
                       ஹீலர் அரோமணி.
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.