Thursday, September 26, 2019

மூட்டில் ஏற்பட்டிருக்கிற தேய்மானமா!


   தலைக்கணத்திற்கும் (head weight) மூட்டுவலிக்கும் தொடர்பா! -இம

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

A 51-மம 1-

மூட்டில் ஏற்பட்டிருக்கிற தேய்மானமா!
          
மூட்டில் ஏற்பட்டிருக்கிற தேய்மானத்தால்தான் மூட்டுவலி வருகிறது என்று நினைக்கிறோம். சைனசிடீஸ் தொந்தரவுக்கும் மூட்டுவலிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. தலைக்கணம்தான் சைனசிடீஸ் தொந்தரவுக்கு காரணமாகும்.

தலைக்கணம் இலேசாக இருக்கும்போது நமது உணர்வுக்கு வராது. உணர்வுக்கு வரும்போது மூக்கடைப்பு, மூக்கில் நீராக ஒழுகுதல், தலைவலி போன்ற தொந்தரவுகள் ஏற்படும். அப்பொழுது மூட்டு வலியும் அதிகமாக இருக்கும்.

அதற்கு எளிய சிகிச்சை இதுதான். உட்கார்ந்து மெதுவாக கண்களை மூடுங்கள்; ஒரு சில நிமிடங்கள் நெற்றியையும் தலையையும் மனதால் கவனியுங்கள். இலேசாக தலைக்கணம் வலி உணர்வுடன் வெளிவரும். அந்த உணர்வை கவனித்து மருத்துவ மனபயிற்சி செய்யுங்கள். தலைக்கணம் முற்றிலும் நீங்கும்வரை செய்யுங்கள். பிறகு மெதுவாக கண்களை திறந்து நடந்து பாருங்கள்; மூட்டு வலி நன்றாக குறைந்திருப்பதை அறிய முடியும்.

காலை மதியம் சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்வது உட்பட, அரோமணியின் 11 இயற்கை விதிகளையும் கடைப்பிடிக்கும்போது நோய்களிலிருந்து விடுதலை பெறலாம்.
                        ஹீலர் அரோமணி
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

Wednesday, September 25, 2019

நோய்களுக்கு மாத்திரைகள் விழுங்கும்போது...!

நோய்க்கு மாத்திரை விழுங்கும்போது, புதிய நோயைத் தோற்றுவிக்கிறீர்கள்!-இம-

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.


சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

நோய்களுக்கு மாத்திரைகள் விழுங்கும்போது...!

           நோய்களுக்கு ஒவ்வொரு  வேளையும் மாத்திரை விழுங்கும்போது 200 மிகி (ஒரு டம்ளர்) தண்ணீர் குடிக்கிறீர்கள். மூன்று வேளையும் சேர்ந்து 600 மிகி நீர் அருந்துகிறோம். அப்பொழுது தாகமில்லை. தாகமில்லாமல் குடிக்கும் நீரை, கழிவுநீரை வெளியேற்றும் உறுப்புகள் ஒன்று சேர்ந்து, இணைந்து கூடுதலாக பணியாற்றி வெளியேற்றுகின்றன.

அதனால் அந்த உறுப்புகள் பலவீனமடைகின்றன. அந்த நீர் ஏற்படுத்தும் ‘டெபாசிட்’ சிறுநீரக கற்களாகின்றன. தொடர்ந்து குடித்து வரும்போது, நாளடைவில் தாகம் எடுக்காமல் நீர் அருந்தும் அடிமை நிலைக்கு தள்ளபடுகிறோம். சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு விடுகிறது.

ஒருவருக்கு குளிர்காலத்தில், 500 மிகி, கோடைகாலத்தில் 1000 மிகி, வசந்த காலத்தில் 700 மிகி நீர்தான் தேவைபடுகிறது. ஆகவே மாத்திரைகளை விழுங்கும்போது உணவான காபி, டீ போன்றவற்றோடு விழுங்குங்கள். முடியாத பட்சத்தில், குறைந்த நீரை பயன்படுத்துங்கள்.

அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது கடைபிடித்து நலமுடன் கவனவாழ்க்கை வாழ்ந்து வளம் பெறுங்கள்.

              ஹீலர் அரோமணி 
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

தேவை மது, மங்கை!


     தேவைகளை சேர்த்து வையுங்கள்!          

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.



உங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை தாருங்கள்; அவர்களுடைய திறமையை வளரச்செய்யுங்கள். அதற்காக பொருள் ஈட்டுங்கள்; செலவு செய்யுங்கள்.

தவறான வழிகளில் பொருள் ஈட்டி, அவர்கள் எண்ணுவதற்கு முன்னாலேயே, தேவைகளை பூர்த்தி செய்து விடுகிறீர்கள். மகனுக்கு எல்லாமே கிடைத்துவிடுகிறது. அடுத்து அவனுடைய நாட்டம், கேளிக்கையின் பக்கம்தான் திரும்பும். மது, மங்கை என்று செல்லும்போது, அழிவுப்பாதைக்குச் சென்று விடுகிறான்.

தேவைகள் இருந்தால்தான், ஆர்வம் ஏற்படும்; ஆர்வம் ஒழுக்கத்தையும், முன்னேற்றத்தையும் கொடுக்கும். ஆகவே வாரிசுகளுக்கு, தவறான வழியில் சொத்து சேர்த்து வைக்காதீர்கள்; அவர்களுக்கு தேவைகளை சேர்த்து வையுங்கள். குழந்தையை மடியிலேயே தூக்கி வைத்துக்கொண்டே இருந்தால், அந்த குழந்தை எப்படி நடக்கும்; எப்பொழுது நடக்கும்?

காலையும், மதியமும் சாப்பிட்டுவிட்டு நடைப்பயிற்சி செய்வது உட்பட அரோமணியின் 11 இயற்கை விதிகளையும் தவறாது கடைப்பிடுத்து வந்தாலே ஒழுக்கம் தானாக வந்து விடும்.
                         ஹீலர் அரோமணி.
தயவுசெய்து உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.

Friday, September 20, 2019

எண்ணெய் குளியல்


எண்ணெய் குளியல் நன்மை தருமா? - இம

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.


அரோமணியின் 9-வது இயற்கை விதி “உடலிலுள்ள துவாரங்கள் அடைபடும்பொழுது.நோய்கள் தோன்றுகின்றன” என்று கூறுகிறது. உடல், அரிப்பின் மூலம் சொரியச் செய்து, அடைபட்ட வியர்வைத் துவாரங்களை திறக்க செய்கிறது.


உடலில் எண்ணெய் தேய்ப்பது, எண்ணெய்  குளியல், கொசுக்கடிக்கு கிரீம் தேய்ப்பது, கால் வலி, மூட்டு வலி ஆகியவற்றிற்கு எண்ணெய் தேய்ப்பது, எண்ணெய் தேய்த்து மஜாஜ் செய்வது ஆகியவற்றில் பயன்படுத்தும் எண்ணெய் உடலுக்கு வெளியிலும், உள்ளேயும் வியர்வை துவாரங்களை அடைத்துவிடுகின்றன. அதனால் தோல் அரிப்பு சம்பந்தமான நோய்கள் தோன்றுகின்றன.

வியர்வை துவாரங்கள் அடைபடாமலிருக்க, காலையும், மதியமும் சாப்பிட்ட பிறகு நடக்க வேண்டும். காற்றின் சுழற்சி, வெளி வெப்பம், செல்களின் உராய்வினால் ஏற்படும் உள் வெப்பம், தோலுக்கு அடியில் தங்கியுள்ள துர்நீர் ஆகிய மூன்றின் செயல்பாட்டினால் வியர்வை துவாரங்கள் திறக்கபட்டு, வியர்வை வெளியேறுகின்றன.,

அரோமணியின் மற்ற 10 இயற்கை விதிகளையும் கடைபிடியுங்கள்.  

            ஹீலர் அரோமணி. 
தயவுசெய்து உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.

Sunday, September 15, 2019

Treatment for bad smell

எண்ஜான் உடம்புக்கு தலையே பிரதானம்!.

மயக்கம், தலைச் சுற்றல்,, கிறுகிறுப்பினால் தள்ளாடாமலிருக்க எளிய சிகிச்சை!-இம

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.


சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

A 57-மம1-

எண்ஜான் உடம்புக்கு தலையே பிரதானம்!. 

எண்ஜான் உடம்புக்கு தலையே பிரதானம். தினசரி உழைக்கும் உழைப்பு, உண்ணும் உணவு,பழக்கவழக்கங்கள்,ஆகியவற்றால்ஏற்படும் கழிவுபொருட்கள், ஒவ்வொருவரது தலையில் சேருகின்றன.


அதன் சேர்க்கை, சிறிய அளவில் இருக்கும்போதுநமக்குதெரியாது.சேர்ந்துகொண்டே வரும்போது, எண்ணெய், நெய் போன்ற கொழுப்புச் சத்து உணவை அதிகம் சாப்பிட்டால், அன்று  திடீரென்று மயக்கம், தலைச்சுற்றல், கிறுகிறுப்பு ஏற்பட்டு கீழே தள்ளிவிடும். அதை மருத்துவ மனபயிற்சி செய்து குணபடுத்திவிடலாம்.

அதற்கு, கண்களை மெதுவாக மூடுங்கள்; நெற்றிப்பொட்டிலிருந்து முழு தலையையும் மனதில் கவனியுங்கள்; ஒரு சில நிமிடங்கள் அப்படியே காத்திருங்கள்; மெதுவாக தலைக்கணத்தின் வலி வெளித்தோன்றும்.. அதையே கவனித்து மம-செய்யுங்கள். வலி கூடி குறையும்வரை செய்யுங்கள். இனி, மயக்கம், தலைச்சுற்றல், கிறுகிறுப்பு வராது. தினசரி செய்யுங்கள்.

அரோமணியின் 11 இயற்கை விதிகளையும் கடைப்பிடிப்பது அவசியம். .
                
                  ஹீலர்,அரோமணி. 
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

Friday, September 13, 2019

வெறும் வயிற்றில் உழைக்கலாமா!

வித்தியாசமான உடலையும், உடல்மன நலத்தையும் பார்ப்பீர்கள்!

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.


சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

   வெறும் வயிற்றில் உழைக்கலாமா! 

வெறும் வயிற்றில் உழைக்கவோ, நடைப்பயிற்சியோ செய்யும்போது, அதற்கு வேண்டிய ஆற்றலை செல்கள், சேமிப்பிலிருந்து தருகிறது. ஆகவே உடலின் சேமிப்பு குறைந்து, உடல் பலவீனமடைகிறது.

இது எப்படி என்றால், வருமானம் இல்லாமல் செலவு செய்வதைப்போல.. அதைதான் அரோமணியின் 10-வது விதி, “வெறும் வயிற்றில் உழைக்கும் நேரத்திற்குத் தகுந்தாற்போல நோய்கள் தோன்றும்” என்று கூறுகிறது.

வயிற்றில் உணவை நிரப்பிவிட்டு உழைக்கும்போது, உணவின் ஆற்றல் உழைப்பிற்கு கிடைக்கிறது. இது வருமானம் கையில் வந்தபிறகு செலவு செய்வதைப்போல.

ஆகவே காலையும், மதியமும் சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்யுங்கள். அதற்கப்புறம், வித்தியாசமான உடலையும், உடல்மன நலத்தையும் பார்ப்பீர்கள்!  “இது நாள்வரையிலும் இதைச் செய்யாமல், காலத்தை வீணடித்து விட்டோமே” என்று எண்ணி வேதனையும், வருத்தமும் அடைவீர்கள்.

அரோமணியின் மற்ற 10 விதிகளையும் கடைப்பிடித்து, நோய்கள் உங்களைக் கண்டு பயப்படச் செய்யுங்கள்! 

           ஹீலர் அரோமணி. 
தயவுசெய்து உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். ,

Monday, September 9, 2019

முன்னேற வேண்டுமா?


  முன்னேற்றத்திற்கு அடிப்படை எது?-இம

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.


கோவில்களில் அர்ச்சகர்கள் பக்தர்களுக்கு அர்ச்சனைகள் செய்வதின் மூலம் மனபயிற்சி பெறுகிறார்கள். வீடுகளில், சூரிய நமஸ்காரம், சந்தியா வந்தனம், பாசிகளை உருட்டி ‘ஒம் நமசிவாயா’ சொல்லியும் மனபயிற்சி பெறுகிறார்கள். எல்லா இடங்களிலும் நடக்கும் “கணபதி ஹோமம்” போன்ற சடங்குகளிலும் மனபயிற்சி பெறுகிறார்கள்.

ஆகவே ஐ.நா.சபையில் செயலாளரிலிருந்து, அரசு துறைகளில், தனியார் துறைகளில் பிராமணர்கள் உயர்பதவிகளை அலங்கரிக்கிறார்கள்.நோபல் பரிசுகளை தட்டிச் சென்றவர்களும் அவர்கள்தான். அவர்களின் அந்த முன்னேற்றத்திற்கு அடிப்படை அவர்கள் செய்யும் “மனபயிற்சிதான்”.

ஆகவே உங்களுக்கும் முன்னேற்றம் வேண்டுமென்றால், நோய்களுக்குறிய மனபயிற்சிகளைச் செய்யுங்கள். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களாக, நோய்களும் குணமாகும் முன்னேற்றமும் கிடைக்கும்.

நோய்களின் நிரந்தரக் குணத்திற்கு அரோமணியின் 11 இயற்கை விதிகளை கடைப்பிடியுங்கள். 
              ஹீலர் அரோமணி. 
தயவுசெய்து உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். 

Sunday, September 8, 2019

’எல்ட்ராக்சின்’ மாத்திரைகள்!

’எல்ட்ராக்சின்’ மாத்திரைகள் தொடர்ந்து எடுத்துக்கொள்ளாமலிருக்க எளிய சிகிச்சை!

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.


செல் எண்கள்: 9442035291;7092209028.


தைராய்டு ஹார்மோன்கள் அதிகமாகவோ, குறைவாகவோ சுரந்தால் நோய்கள் வந்து, அதற்கு சரிசெய்ய, எல்ட்ராக்சின் மாத்திரைகளை தொடர்ந்து நோயாளிகள் எடுத்துக்கொண்டு வருகிறார்கள்.

நகமும், முடியும் வெட்ட, வெட்ட வளருகிறது; தீயில் கருகிய சதைப்பகுதி குணமாகிறது; விபத்துகளில் ஏற்பட்ட காயங்கள் ஆறி நலமாகின்றன. அறுவைச்சிகிச்சைகளில் ஏற்படுத்திய காயங்கள் ஆறுகின்றன. அதாவது உடலின் செல்கள் வளர்ச்சி அடைவதால்தான், காயங்கள் ஆறுகின்றன.

அப்படியிருக்கும்போது, தைராய்டு கிளாண்டின் செல்கள் வளர்ச்சிபெற்று, சரியான அளவு ஹார்மோன்களை சுரக்காதா! வியாபார மருத்துவ உலகம் செல்களின் வளர்ச்சியை தடுத்துக்கொண்டிருக்கிறது.  

மெதுவாக கண்களை மூடுங்கள். கழுத்தின் முன்பகுதியை கையால் வருடி, அப் பகுதியை கவனியுங்கள். 10 நிமிடங்கள் தொடர்ந்து செய்யுங்கள். மாலையிலும் 10 நிமிடங்கள் செய்யுங்கள். இரவு படுத்துக்கொண்டே தூக்கம் வரும்வரை செய்யுங்கள். மேற்கூறிய மம-ஆனது ரத்தத்தை அப்பகுதிக்கு அனுப்பி, குறையை சரிப்படுத்துகிறது.

அரோமணியின் 11 இயற்கை விதிகள், தைராய்டு கிளாண்டு சரியாக இயங்க உறுதுணையாக இருக்கும். 

                ஹீலர் அரோமணி. 
தயவுசெய்து உஙக்ள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.








Wednesday, September 4, 2019

புத்திசாலிகள்!

கேளிக்கைகளுக்கு இடம் கொடுத்துவிட்டு. வளர்ச்சி பின்வாங்கிக் கொண்டது!-இம!

     அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.செல் எண்கள்: 9442035291;7092209028.

ஆதிகால மனிதர்கள் ஆவிகளை ஆற்றலைக்கொடுக்கும் தெய்வங்கள் என்று நினைத்தார்கள். பிறகு சூரியனை வழிபட்டார்கள்.

ஆதிகால மனிதர்களில் புத்திசாலிகள் சிலர்,, பிழைப்புக்காக, கற்பனை கதைகளை உருவாக்கி, அதன் கதாநாயகர்களை, ஆண், பெண் உறவில்லாமல் பிறந்ததாகவும், அற்புதங்கள் செய்வதாகவும் சிறப்பாகச் சொல்லி, வழிபட வைத்தார்கள்.

இன்று மனிதன் வேறு கிரகங்களுக்குச் சென்று வாழுகின்ற நிலைக்கு வந்துவிட்டான். ஆனால் வழிபாட்டு முறையில் மட்டும் மாற்றமில்லாதது வேதனைக்குறியதாகும்.

உருவவழிபாடு சடங்குகளை உருவாக்கியது, சடங்குகள் கேளிக்கைகளுக்கு தாராளமாக கதவுகளை திறந்து விட்டன. வழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் மனபயிற்சி பின்னுக்குத் தள்ளப்பட்டது.

இந்தியா 400 ஆண்டுகளாக அந்நியர்களிடம் அடிமையாக இருந்தது. விடுதலை பெற்றும் மக்களுடைய வாழ்வாதாரத்தில் முன்னேற்றமில்லை. இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் வெளிநாடுகளில் சிறைகளில் சொல்லொணாத துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் உருவ வழிபாட்டின் சிறப்பு இதுதான். 

               ஹீலர் அரோமணி. 
தயவுசெய்து உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.