Friday, April 12, 2019

யாரை வழிபட


ஆன்மீக ஆற்றலை (spiritual power) பெற யாரை வழிபட வேண்டும்?

D 184-TM-இரட்டை மருத்துவத்தின் ஆன்மீகம்-
     ஆன்மீக ஆற்றலை பெற யாரை வழிபட வேண்டும்?

இறைவனிருக்கும் இடத்தை தவறாகப் புரிந்து கொண்டு, வழிபாடு செய்வதுதான், உங்களுக்கு ஆன்மீக ஆற்றல் கிடைக்காததற்கு முழு முதற் காரணமாகும்.  உங்களது வழிபாட்டில் மனபயிற்சி இடம் பெறவில்லை என்பது இரண்டாவது காரணமாகும். “தூணிலும், துரும்பிலும் இருக்கும் இறைவன் கல்லிலும் இருக்கிறான்” என்றுதான், கல்லைச் சிலையாகச் செதுக்கி வழிபாடு செய்கிறோம் என்று சொல்கிறீர்கள். கல்லில் இருக்கும் இறைவன், கல்லின் வளர்ச்சிக்காகத்தான் இருக்கிறான், உலோகக் கலவையில் இருக்கும் இறைவன், உலோகக் கலவையின் வளர்ச்சிக்காகத்தானிருக்கிறான். உங்களுடைய வளர்ச்சிக்காக இல்லை; முட்டையில் மஞ்சள் கருவில் இறைவன் இருக்கிறான் என்பதற்காக, முட்டையை வைத்து வணங்க முடியுமா! உங்களுடைய வளர்ச்சிக்காக உங்களுக்குள் இறைவன் இருக்கிறான். உங்களுடைய வளர்ச்சிக்கு அவனைத்தான் வழிபட வேண்டும்.

              ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)

No comments:

Post a Comment