Tuesday, April 16, 2019

4 மருத்துவங்கள்!


மூட்டு வலிக்கு ஒரே நேரத்தில் 4 மருத்துவங்கள்!

A 169-இம--
என் கைவசம் அன்றைய தேதியில் மூன்று மருத்துவங்கள் இருந்தன. மூட்டு வலியிலிருந்து விரைவில் குணமடைய ஆயுர்வேத மருந்தையும் (மாத்திரைகள் மற்றும் காலுக்குத் தேய்க்கும் தைலம்) சேர்த்துக்கொண்டேன். வாரத்துக்கு ஒரு தடவை அக்குபங்சர் சிகிச்சை எடுத்துக் கொள்வேன். தினசரி  காலையிலும் மாலையிலும் 15 நிமிடங்கள் மூட்டு மற்றும் காலின் கீழ்ப்பகுதி வரை ரீகி ஆற்றலைக் (ஜப்பானிய சிகிச்சை முறை) கொடுத்தேன். அது முடியவும் 15 நிமிடங்கள் காலுக்குத் தைலம் தேய்க்கும்போதே தேய்ப்பதில் கவனத்தைச் செலுத்தி, மருத்துவ மனபயிற்சி மருத்துவத்தையும் (Medical of Medicinal Meditation) சேர்த்துக் கொண்டேன்.

ஓராண்டு காலமாக இவ்வாறு சிகிச்சை எடுத்துக் கொள்ளவும், மூட்டு வலி குறைந்துகொண்டே வந்தது. எனது நடையிலும் முன்னேற்றம் ஏற்பட்டது. மாத்திரைகள் எடுப்பதை மூன்று வேளையிலிருந்து இரண்டு வேளையாகக் குறைந்தது. காலையில் மட்டும் தைலத்தோடு மருத்துவ மனபயிற்சியைச் சேர்த்து அரை மணிநேரம் செய்து வந்தேன். இப்பொழுது வலி குறைந்து விட்டதால், மூட்டில் மட்டும் தைலம் தேய்த்து வருகிறேன்.

செயற்கை பற்கள் மேலேயும் கீழேயும் பொருத்தி ஏழாண்டுகள் ஆகிவிட்டதால், பல் வலி, ஈரல் வலி இருந்து கொண்டிருந்தது. கம்ப்யூட்டரை அதிகம் பயன்படுத்துவதால், கண்களின் ஆற்றலை அதிகரிக்கும் அவசியமும் இருந்தது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில், ஏழாண்டுகள் மோட்டார்களின் சத்தத்தில் பணி செய்ததால், காதுகளின் ஆற்றலும் குறைந்திருந்தது. ஆகவே அதனுடைய ஆற்றலையும் அதிகரிக்க வேண்டியதிருந்தது. அதற்கு ‘’ரீகி’’ ஆற்றனலைப் பயன்படுத்தினேன்.

             ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)
Please register your comment


No comments:

Post a Comment