கைகழுவாமல் சாப்பிட்டு ஆராய்ச்சி---
H 201-TMH-கொசு ஒழிப்பு
H 201-TMH-கொசு ஒழிப்பு
Copy of the Email submitted to all the
District Collectors at 6 pm on 2-11-2018
அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை
57/176A6, 3-வது தெரு, பேரையூர் சாலை,
உசிலம்பட்டி-625532.
செல் எண்கள்: 9442035291,
7092209028. www.medineliving.blogspot.com;
www.grace1983.blogspot.com;
“Healer Aromani Videos” in the youtube.
அன்புள்ள ஐயா,
வணக்கம். மாவட்ட ஆட்சியரின்
அன்பான கவனத்தை 2-11-2018 தேதியின் ‘தினத்தந்தி’ நாளிதழின் பக்கம் 11-ல் வந்த செய்தியின்
பால் ஈர்க்கிறோம். அந்த செய்தியின் தலைப்பாக “டெங்கு கொசு ஒழிப்புப் பணிக்கு மாணவர்களை
அழைக்கும் கலெக்டர். உற்பத்தியாகும் இடங்களை கூறினால் 5 மதிப்பெண்ணுடன் சான்றிதழும்
கிடைக்கும்.” என்று வெளிவந்திருக்கிறது.
கொசு ஒழிப்புப் பற்றி
ஏழு ஆண்டுகளாக (7/2010 முதல் 13-7-2018 வரை) ஆராய்ச்சி செய்து, கொசுவை முற்றிலும் ஒழிக்கும்
விதமாக ஒரு எளிய முறையை நிறுவனர் அரோமணி கண்டுபிடித்திருக்கிறார்.. மக்கள் பயன்படும்படியாக,
“Simple Procedure to Eradicate Mosquitoes” என்ற ஆங்கிலப் புத்தகம், சென்னை நோஷன்
பிரஸ் மூலமாகவும், “கொசுக்களை ஒழிக்கும் எளிய செயல் முறை” என்ற தமிழ் புத்தகம், சென்னை
கவுதம் பதிப்பகம் மூலமாகவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
நிறுவனரும் ஆராய்ச்சியாளருமான
ஹீலர் R.A.பரமனு (அரோமணி)
டைய குடும்பத்திலுள்ளவர்கள் அனைவரும், இரண்டு ஆண்டுகளாக
கொசுக்கடியிலிருந்து முற்றிலும் விடுபட்டு நன்றாக தூங்கி எழுந்திருக்கிறார்கள்.
கொசுக்கள்
உற்பத்தியாகும் இடங்கள்!
எழுபது ஆண்டுகளுக்கு முன்பு
பம்பாய் கக்கூஸ் என்னும் நவீன கழிப்பறைகள் கிடையாது. ஆகவே அக்காலங்களில் கொசு உற்பத்தி
கிடையாது. கொசுக்களின் பெரும்பகுதி, வீடுகளில், நவீன கழிப்பறைகளுக்குக் கீழே கட்டப்பட்டுள்ள
செப்டிக் டேங்க் குழாய்கள், செப்டிக் டேங்கில் தேங்கியுள்ள கசடுகள் ஆகியவற்றில்தான்
உற்பத்தியாகின்றன. அதைத் தவிர, சமயலறை பாத்திரங்கள் கழுவும் தொட்டி, அதனுடைய கழிவுநீர்க்
குழாய், சமயலறை கழிவுக் கூடை, குளிக்கும் அறையின் கழிவுநீர்க்குழாய், வாஸ் பேசின் கழிவு
நீர்க்குழாய் ஆகிய மற்ற இடங்களாகும்; இவற்றில் சிறிதளவுதான் உற்பத்தியாகின்றன.
கொசுக்களை
ஒழிக்கும் செயல்முறை விளக்கம்!
ஒவ்வொரு கழிப்பறை மலக்
கோப்பையிலும் பிளீட்சிங் பவுடர் ஐந்து ரூபாய் பொட்டலம் (100 கிராம்) ஒன்றைத் திறந்து,
முழுவதையும் போட்டு ஐந்து லிட்டர் நீரை ஊற்றிவிட வேண்டும். இதை காலையில் 10 மணிக்குள்ளும்
இரவு 8 மணிக்குள்ளும் போடவேண்டும். தினசரி இரண்டு பொட்டலங்கள் செலவாகும். 20 கிராம்
அளவுக்கு பிளீட்சிங் பவுடரை சமயலறை பாத்திரங்கள் கழுவும் தொட்டியிலும் போட்டு நீரை
ஊற்றிவிடவேண்டும் மற்றும் கழிவுக் கூடையில் சிறிதளவு பவுடரைத் தூவி விடவேண்டும். குளிக்கும்
அறையில் 10 கிராம் அளவுக்கு பவுடரை கழிவுநீர்க் குழாயில் போட்டு நீரை ஊற்றிவிட வேண்டும்.
வாஸ் பேசின் கழிவு நீர்க் குழாயில் 10 கிராம் பவுடரைத் தூவி நீர் ஊற்றிவிட வேண்டும்.
இவை அனைத்திற்கும் காலையில் அரை பொட்டலமும், இரவு அரைப்பொட்டலமும் தேவைப்படும். தினசரி
3 பொட்டலங்கள் தேவைப்படும். இதைத் தவறாது செய்து வந்தால், ஒரு வாரத்திற்குள் கொசு உற்பத்தி
தடுக்கப்பட்டு விடும். எல்லா வீடுகளிலும் கழிவுநீர்க் குழாய்களில் பவுடரைப் போட்டு
நீர் ஊற்றும்போது, சாக்கடைக் கால்வாய்களிலும் கொசு உற்பத்தி இருக்காது.
காய்ச்சல்களைப்
பற்றிய விளக்கம்.!
“டெங்குக் கொசுவினால்,
டெங்குக் காய்ச்சல்” என்பது மருத்துவ வணிக உலகம் மக்களை பயத்தில் உறைய வைப்பதற்காக
வைத்த பெயர். இப்படி உறைய வைப்பதின் மூலம் மக்கள் மாற்று மருத்துவங்களில்
(Alternative Medicines) சிகிச்சை எடுக்கப் பயப்படுகிறார்கள். ஏழாண்டு கால ஆராய்ச்சியில். பல நாட்கள் ஆராய்ச்சியாளர்
அரோமணியை கொசுக்கள் கடிக்க அவர் அனுமதித்திருக்கிறார்.
டெங்கு கொசு என்ற ஒன்று இருப்பதாக தெரியவில்லை.
அவருக்கு எந்த டெங்கு காய்ச்சலோ, பன்றிக் காய்ச்சலோ, பறைவைக் காய்ச்சலோ வந்ததில்லை.
நோய்கள் பெரும்ப்பாலும் மழைகாலத்திலும், குளிர்காலத்திலும்தான்
வருகின்றன. காரணம் என்ன? கோடைகாலத்திலும், வசந்த காலத்திலும் நமது தொழிலின் காரணமாகவும்,
வேறு பல காரணங்களாலும் கழிவுப்பொருட்கள் உடலில் வெளியேறாமல் தங்கிவிடுகின்றன. அந்த
தேங்கிய கழிவுப் பொருட்களை ஆண்டுப் பராமரிப்பில் உடல் எடுத்துக்கொண்டு, குளிர் மற்றும்
மழையினால் ஏற்படும் குளிர்ச்சியினால், உடலை சுருங்க வைத்து, உள்ளிருக்கும் கழிவுப்பொருட்களை
பிழிந்து எடுத்து வெளியேற்றுகின்றன. அவ்வாறு வெளியேற்றும்போது ஏற்படும் தொந்தரவுகளைத்தான்
நோய்கள் என்று சொல்கிறோம். உடல் பராமரிப்பு வேலை செய்வதை நாம் நோய்கள் என்று சொல்கிறோம்.
அப்படி உண்டாகும் நோய்களில் ஒன்றுதான் காய்ச்சல். பலவித காய்ச்சல்கள் கிடையாது. காய்ச்சல்
ஒரே ஒரு காய்ச்சல்தான். காய்ச்சல் நோயாளியை பட்டினி போட்டு மாற்று மருத்துவங்களில்
சிகிச்சை எடுத்துக்கொண்டால், காய்ச்சலிலிருந்து குணமாகிவிடலாம்.
கிருமிகளால்
நோய்கள் தோன்றுவதில்லை!
“கிருமிகளால் நோய்கள்
தோன்றுகின்றன; காற்றின் மூலமாகவும் நீரின் மூலமாகவும் பரவுகின்றன” என்கின்ற ஒரு தவறான
கொளகையும் மருத்துவ வணிக உலகம் மக்களை பயத்தில் உறைய வைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
கிருமிகளால் நோய்கள் தோன்றுவதில்லை. உடலுக்குள் நீண்ட நாடகள் வெளியேறாமல் தங்கிவிட்ட
கழிவுப் பொருட்களை தின்று அழிப்பதற்குத்தான் கிருமிகள் தோற்றுவிக்கப்படுகின்றன.
ஆறு
மாதங்களாக கை கழுவாமல் சாப்பிட்டு ஆராய்ச்சி!
கை கழுவிய பிறகுதான் சாப்பிட
வேண்டும் என்ற பலமான பிரச்சாரம் செய்யப்படுகிறது. அரோமணியின் ஆராய்ச்சியில், ஆறு மாதங்களாக
கை கழுவாமல்தான் சாப்பிட்டு வந்திருக்கிறார். அவருக்கு எந்த தொற்று நோயும் கிருமிகளால்
வந்ததில்லை. நன்றாகத்தான் இருக்கிறார். அவருடைய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று இணைக்கப்பட்டிருக்கிறது.
கொசுவை ஒழித்தால் மட்டும்
போதாது, நோய்கள் பற்றிய மக்களுக்கிருக்கும் அறியாமையைப் போக்கி, விழிப்புணர்வையும்
ஏற்படுத்த, வேண்டும்.
“கொசுக்களை ஒழிக்கும்
எளிய செயல் முறை” புத்தகத்தில் சொன்னபடி செயல்முறையை செய்து வரும் போது கொசுக்களை முற்றிலும்
ஒழித்துவிட முடியும். ஆகவே அப்புத்தகத்தை அரசுத் துறைகளில் உள்ள புத்தகப் படிப்பகங்களுக்கும்,
அரசு உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் ஆகிய படிப்பகங்களுக்கு வாங்குவதற்கு உத்தரவும்
மற்றும் தனியார் உயர்நிலைப்பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் வாங்குவதற்கு அறிவுறுத்தவும்
ஆவண செய்ய வேண்டுமாய் அன்புடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
தங்கள்
உண்மையுள்ள
ஹீலர் R.A.பரமன்
(அரோமணி)
சூப்ரண்டிங் எஞ்சினியர் (ஓய்வு)/தமிழ்நாடு
மின்சார வாரியம்.
அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனைக்காக
2-11-2018
இணைப்பு-
‘தினத்தந்தி’ செய்தியின் நகல்
No comments:
Post a Comment