Tuesday, December 25, 2018

மூச்சு திணறல்

A 198-MM Part 1-மருத்துவ மனபயிற்சி 3-
   மூக்கடைப்பு, மூக்கில் சளி, மூச்சிறைப்பு, நெஞ்சில் சளி கட்டுதல், இளப்பு ஆகிய நோய்களுக்கு மருந்தில்லா சிகிச்சை 1

மூச்சிறைப்பு, நெஞ்சில் சளி கட்டுதல், ஆஸ்த்மா ஆகியவற்றிற்கு மிக மிக மிக எளிய மருந்தில்லா மருத்துவம் ஒன்றைச் சொல்லப் போகிறேன். மூன்று மிக போடுவதற்கு தகுந்தவாறு எளிமையானது. இதற்குத்தான், நீங்கள் எத்தனை டெஸ்ட்கள், ஸ்கேன், எக்ஸ்ரே என்று எடுக்க வேண்டியதிருக்கு. எவ்வளவு நேரம் காத்திருப்பு; எவ்வளவு பணச்செலவு. உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும் எவ்வளவு துயரங்கள்! 

மேற்கூறிய நோயுள்ளவர்கள், சளி துப்புவதற்கு ஒரு குவளையை பக்கத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்தமான புத்தகத்தை அல்லது அன்றைய செய்தித் தாளை எடுத்துக்கொள்ளுங்கள். சிறுபிள்ளைகள் சத்தம் போட்டுப் பாடங்களைப் படிப்பது போல உரக்கச் சத்தம் போட்டுப் படியுங்கள். ஐந்து நிமிடங்கள் கழித்து சளி வர ஆரம்பிக்கும். வரக்கூடிய சளியை துப்புங்கள். அப்படி தொடர்ந்து படிக்கும்போது, சளியும் நீர் கலந்து இருமலுடன் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். தேங்கியிருக்கும் சளியின் அளவுக்குத் தகுந்தாற்போல, முழு சளியும் வெளியேறுவதற்கு அரை மணி நேரம் அல்லது கூட ஆகலாம். முழுச் சளியும் வெளியேறிவிட்டால், மார்பில் உங்களை அழுத்திக் கொண்டிருந்த இறுக்கம் அல்லது பிடிப்பு முழுவதும் நீங்கி சுலபமாக உங்களால் மூச்சு விட முடியும்.

இது எப்படி வேலை செய்கிறது?
வேகமாகச் சத்தம் போட்டுப் படிக்கும்போது, காற்று வேகமாகச் உள்ளே செல்லுகிறது; சென்ற காற்று,, காற்றுப் பாதையில் உள்ள உறுப்புகளின் செல்களில் உராய்வை ஏற்படுத்துகிறது; உராய்வினால், வெப்பம் உற்பத்தியாகிறது. இந்த வெப்பத்தினால், நுரையீரல், மார்புப் பகுதிகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் சளி பெயர்ந்து விடுகிறது. வேகமாகச் செல்லும் காற்றும் வெப்பமும் இணைந்து இருமலைத் தோற்றுவிக்கிறது. இருமல் பெயர்ந்து கிடக்கும் சளியை நீருடன் கொண்டுவந்து வாய் வழியாக வெளியேற்றுகிறது.. தொடர்ந்து வெளிவரும்பொழுது மார்பு இறுக்கம் குறைந்து மூச்சு விடுவது சுலபமாகிவிடும்.

சளி உற்பத்தியை குறைக்காவிட்டால், தினசரி சத்தம் போட்டுப் படித்துக்கொண்டிருக்க வேண்டும். அதற்குத்தான் அரோமணியின் 11 விதிகளையும் தவறாது கடைப்பிடிக்க வேண்டும். அப்பொழுதுதான் சளி உற்பத்தியைக் குறைக்க முடியும். சளியின் தேக்கத்தால்தான் மூச்சிறைப்பு ஏற்படுகிறது; நெஞ்சில் சளி கட்டுகிறது,. ஆஸ்த்மா வருகிறது. கிருமிகளால் நோய்கள் உண்டாவதில்லை என்பதை இனிமேலாவது நீங்கள் நம்புவீர்கள் என்று நான் நம்புகிறேன்.
                 கவன வாழ்க்கை வாழுக! வளர்க வளமுடன்!ஹார்ட் அட்டாக்

A199-MM Part 1- மருத்துவ மனபயிற்சி 1-
ஆண்மைக் குறைவு, மன அழுத்தம், சர்க்கரை, இரத்த அழுத்தம், இருதய வலி, ஹார்ட் அட்டாக், உடல் பருமன் மற்றும் வலி தெரியாத நோய்களுக்கு மருந்து இல்லாத சிகிச்சை.-மருத்துவ மனப்பயிற்சி-1

மன அழுத்தம் எங்கே சேருகிறது?
கிராமத்தில் இரு பெண்கள் சண்டையிடும்போது நீங்கள் கவனித்திருப்பீர்கள். ஒரு பெண் மற்ற பெண்ணிடம் கோபமாக ஆக்கிரசத்தோடு சொல்லுவாள் “ நீ எனக்குச் செய்த துரோகத்தை நினைக்கும்போது, என் நெஞ்சே கணக்குது” நெஞ்சு கணக்குது என்று சொல்கிறாள். அதன் பொருள் என்ன? அவளுடைய கோபத்திற்கும் ஆக்கிரோசத்திற்கும் சூத்திரதாரியாக உள்ள மன அழுத்தம் அவளுடைய நெஞ்சில் அதாவது மார்பில் சேர்ந்திருக்கு என்பது பொருளாகும். மனக் கவலை, மன அழுத்தம் ஆகிய எதுவாயிருந்தாலும் அது மார்பில்தான் வந்து சேருகிறது. ஆகவே மனதில் சேர்ந்துள்ள மன அழுத்தம் என்று சொன்னாலும், அந்த மன அழுத்தம் மார்பில்தான் சேருகிறது. மன அழுத்தத்தை போக்க வேண்டுமென்றால், அதை மார்பிலிருந்துதான் விரட்ட வேண்டும். அந்த அழுத்தத்தை விரட்டும், மருத்துவ மனப்பயிற்சியை உங்களுக்குச் சொல்லித் தருகிறேன். அதைக் கற்று பயன் பெறுங்கள்

ஒரு சாய்வு நாற்காலியில் நன்றாக வசதியாகச் சாய்ந்து உட்காருங்கள். தலையை சுவற்றில் சாய்க்காமல், சிறிது தாழ்த்தி இருக்கட்டும். மெதுவாகக் கண்களை மூடுங்கள். 10 லிருந்து 15 நொடிகள் மனதில் எந்த எண்ணமும் இல்லாமல் மனதை வெறுமனே வைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுதுதான் மனப்பயிற்சி நன்கு அமையும்.

. இப்பொழுது மார்பை மனக்கண்ணால் பாருங்கள். அது சுருங்கி விரிவதைக் கவனியுங்கள்; மார்பில் இருக்கம் அல்லது பிடிப்பு இருந்தால் அந்த உணர்வையும் மனதில் நினையுங்கள். தொடர்ந்து நினைத்துக்கொண்டே இருங்கள். வேறு எண்ணங்கள் வரும்போதெல்லாம், அவற்றை நிறுத்தி விட்டு, மீண்டும் மீண்டும் மார்பையே கவனிக்க வேண்டும். தொடர்ந்து நினையுங்கள்; எண்ணங்கள் வரும்போதெல்லாம், அவற்றை நிறுத்திவிட்டு, மனதை மெதுவாகத் திருப்பிக் கொண்டுவந்து மார்பை கவனிக்கச் செய்யுங்கள். மார்பிலிருந்து மன அழுத்தம் வெளியேறிக் கொண்டே இருக்கும்.

யாராவது உங்களைப் பார்க்க வந்தால், பயிற்சியை நிறுத்திவிட்டு, 20 நொடிகளுக்குப் பிறகு கண்களைத் திறந்து, வந்தவரிடம் பேசிவிட்டு, மீண்டும் வந்து தொடர்ந்து செய்யலாம். பசியோடு இப்பயிற்சியைச் செய்யக் கூடாது மன அழுத்தம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து இடைவெளி விட்டு விட்டு மனக் கணம் குறைந்து இலேசாகும் வரை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

மனப்பயிற்சியின் போது நடக்கும் நிகழ்வு.
நீங்கள், மார்பு சுருங்கி விரிவதையும், பிடிப்பு உணர்வையும் கவனித்தவுடன். மனமானது பிடிப்பு அல்லது இறுக்க உணர்வை எடுத்துக்கொண்டு கீழ்நோக்கிப் பயணிக்கிறது. பயண வழியெங்கும் இறுக்கத்தை இறக்கிவிட்டு அதன் மூலம் மன அழுத்தத்தை மனதை விட்டு வெளியேற்றி விட்டு சென்றுகொண்டே இருக்கிறது. ஆழ்மனதை சென்றடையும் போது, மனதில் இறுக்கமும் இருக்காது; மன அழுத்தமும் இருக்காது; மனதில் கணம் இருக்காது; மனம் இலேசாக இருக்கும். இந்த இடத்தில்தான், மேல் மனம் ஆழ்மனதோடு இணைகிறது. இங்குதான் ஒரு பெரிய நிகழ்வு நடக்கிறது. அப்படி இணையும்போது மேல் மனமானது நித்திய இறைவனின் ஆற்றலை எடுத்துக் கொண்டு மேல் நோக்கி வாழ்க்கையை வளப்படுத்த வருகிறது. இதன் உண்மைத் தன்மையை,  நீங்கள் மருத்துவ மனப்பயிற்சியை தவறாது செய்து அறிந்து கொள்ள முடியும்.

மேலே குறிப்பிட்ட மருத்துவ மனப்பயிற்சி, மன அழுத்தம், சர்க்கரை, இரத்த அழுத்தம், இருதய வலி, ஹார்ட் அட்டாக், உடல் பருமன் மற்றும் வலி இல்லாத நோய்களுக்கு மருந்து இல்லாத சிகிச்சையாகப் பயன்படுத்தப்படுகிறது.

                கவன வாழ்க்கை வாழுக! வளர்க வளமுடன்.

         

Sunday, December 23, 2018

பூமியில் சொர்க்கம் விதி 11


     பூமியில் சொர்க்கத்தைக் காண்பீர்கள்!  விதி 11


A 200-MLM-அ.11 விதிகள்      


                      
Copy right to        Er.R.A.Bharaman @ Aromani
Email: twinmedicine@gmail.com; Please visit the websites:
www.medicineliving.com;  
www.medicineliving.blogspot.com;


  பூமியில் சொர்க்கத்தைக் காண்பீர்கள்!
              அரோமணியின் 11-வது இயற்கை விதி.
கொலை செய்வதும், கொள்ளையடிப்பதும், திருடுவதும், ஏமாற்றுவதும்,  கற்பழிப்பதும், சுருங்கச் சொல்வோமானால், எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் பிறருக்கு எந்தவிதமான கெடுதல் செய்தாலும் அதற்குப் பின்னால் இருப்பது ஒன்றே ஒன்றுதான். அதுதான் மன அழுத்தம் (Depression).

மனதில் தோன்றும் ஆசை, எதிர்பார்ப்புகளை தோற்றுவிக்கிறது. அனைத்து எதிர்பார்ப்புகளும் நிறைவேறாதபோது மன அழுத்தங்களாக மாறிவிடுகின்றன. மன அழுத்தங்கள் அடைகாக்கப்பட்டு பெரிய ஆலமரங்களாக மாறும்போதுதான், ஒருவர் எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் மற்றவர்களுக்கு கெடுதல் செய்கிறார்கள். மன அழுத்தம்தான் ஒருவருடைய வாழ்வை பின்னடையச் செய்து அழிப்பது. அந்த மன அழுத்தத்தைப் போக்கிவிட்டால், அவருடைய வாழ்க்கை வளமுடையதாக மாறிவிடுகிறது. இரண்டாம் உலகப் போர் மூண்டு பேரழிவை ஏற்படுத்தியதும், ஹிட்லருக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தால்தான்.

மன அழுத்தத்தைப் போக்கத்தான், மகான்கள் தோன்றி மதங்களை நிறுவினார்கள். அந்த மதவழிபாடுகளில் மனதுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, மன அழுத்தம் குறைக்கப்படுகிறது. மன அழுத்தம் குறையக் குறைய, எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் மற்றவர்களுக்குக் கெடுதல் செய்யக்கூடிய குணம் குறைந்து, வாழ்வில் முன்னேற்றம் பெறுகிறார்கள். புத்த மதம் வியாப்சனா தியானத்தை வழிபாடாக வைத்திருக்கிறது. கிறிஸ்து மதவழிபாட்டில். பிரார்த்தனை, இறைப்பாடல்களைப் பாடுவது, இறைச் சொற்பொழிவு மற்றும பைபில் படிப்பது போன்ற அம்சங்கள் இடம் பெறுகின்றன. ஆகவே மதங்களின் நோக்கம் மன அழுத்தத்தைக் குறைத்து, நோய்களைக் குணப்படுத்தி,  மன மனவளத்தைப் பெருக்குவதுதான். மனவளம் அறியாமையைப் போக்குகிறது.

இந்து மதத்தைப் பொறுத்தவரையில், பக்தி முறை வழிபாடு, மனதுக்குப் பயிற்சி அளிக்காமல், உடலுக்கு பயிற்சி அளிக்கும் விதமாகத்தான் அமைந்திருக்கிறது. , திருநீறு பூசுவது, தேங்காய் உடைப்பது, மொட்டை அடிப்பது, பொங்கல் வைப்பது, தீபாராதனை செய்வது, மொளப்பாரி எடுப்பது, போன்ற செயல்கள்தான் பெறுமளவு இடம் பெற்றுள்ளன. அவற்றால் மன அழுத்தம் குறையாது; அதிகப் பலன்கள் இருக்காது. கோயிலுக்குப் போனால், அங்கு சென்று உட்கார்ந்து, இறைவனைப்பற்றிய பாடல்களைப் பாடுவது, பிரார்த்தனை செய்வது, இந்து மதப் புத்தகங்களைப் படிப்பது, திருக்குறளைப் படிப்பது, மருத்துவ மனப்பயிற்சி செய்வது போன்ற மன அழுத்தங்களைக் குறைக்கும் விதமாக நமது வழிபாடுகள் இருக்க வேண்டும்.

எனது 34 ஆண்டுகால ஆராய்ச்சியில்தான், இரட்டை மருத்துவத்தைக் கண்டுபிடித்தேன். அதில், இரண்டாவது மருத்துவமான மருத்துவ மனப்பயிற்சி மருத்துவத்தில் உள்ள மருத்துவ மனப்பயிற்சிகளை கொண்டு எனக்குள்ள பல நோய்களை ஆஸ்த்மா உட்பட குணப்படுத்திக்கொண்டேன். போனஸாக, ஆன்மீகத்திலேயும் தெளிவு பெற்றேன். மருத்துவ மனப்பயிற்சிகளில் நான் பெற்ற அனுபவத்தின் மூலம், இறைவன் எனனை கவன வாழ்க்கைக்கு மாறச் செய்தான். கவனவாழ்க்கையில்தான், உடல் மன நலம்தான் ஆன்மீகம் என்ற நிலைப்பாட்டை எடுக்க வைத்தான். முழு உடல் மனம் உள்ளவர் கோயிலுக்குப் போக வேண்டியதில்லை ஏனென்றால் அவரே  இறைவனாக காட்சி அளிக்கிறார்; 

தற்பொழுது மக்கள் வாழும்  ‘கற்பனை வாழ்க்கை”யில் முழு உடல்மன நலம் பெற முடியாது; ஏனென்றால் தினசரி மன அழுத்தம் மக்களிடம் சேர்ந்து கொண்டே இருக்கிறது. மன அழுத்தம் அல்லது மனக் கவலைதான் நோய்களைத் தோன்ற வைக்கும் முதல் காரணி. மன அழுத்தம் ஒருவரிடமிருந்து வெளியேறாத வரை, அவர் நோய்களிலிருந்து மீள முடியாது. மதவழிபாட்டின் மூலம் ஓரளவுதான் மன அழுத்தத்தை வெளியேற்ற முடியும். அதனால்தான் மனப்பயிற்சியை வழிபாடாக வைத்திருப்பவர்களும் எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும், பிறருக்கு தீங்கு செய்கிறார்கள். இலங்கையில் 1.5 லட்சம் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். மியான்மாரில், முஸ்லீம்கள் லட்சக் கணக்கில் அகதிகளாக பங்களா தேசத்தில் அடைக்கல மானார்கள். ஆனால் அவர்களுடைய வாழ்க்கைதரம் முன்னேறியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அரபு நாடுகளைச் சேர்ந்த எவரும் வேலை தேடி பிறநாடுகளுக்குச் செல்வதில்லை. சீனர்களோ, ஜப்பானியர்களோ பிறநாடுகளுக்கு கூலிகளாக வேலைக்குப் போவதில்லை. அவர்கள், பாதாளச் சிறைகளில் அடைபட்டு, கசை அடிகள் வாங்குவதில்லை.

”கையளவு நெஞ்சத்திலே கடலளவு ஆசை மச்சான்” என்ற சினிமா பாடல் மிகவும் பிரபலமானது. ஆசை ஏற்படுவது இயல்பு. அதைத் தடுக்க முடியாது. ஆனால் அந்த ஆசை, உங்களுடைய வாழ்க்கையை அழித்துவிடக்கூடாது. கவனவாழ்க்கை மனதில் தோன்றும் ஆசையை சீராக்கி வாழ்க்கையை வளப்படுத்துகிறத கவன வாழ்க்கையில்தான் ஒருவர் முழு உடல்  மன நலம் பெறமுடியும்; 100 விழுக்காடு எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும், பிறருக்கு தீங்கு செய்ய மாட்டார்கள். அறியாமை பூரணமாக விலகியிருக்கும். அவ்வாழ்க்கை வாழ்பவர்களுக்கு எவராலும் கெடுதல் செய்ய முடியாது. அவர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும் (Field of all possibilities).ஆற்றலைப் பெற்றிருப்பார்கள். புதியன பல கண்டுபிடிப்பார்கள்; ஆயுள் நீடிக்கும்; இயற்கை துணை நிற்கும். பயம் என்பது அறவே இருக்காது; நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான் நடக்கும். இறைவனின் பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பார்கள். இறைவன் அவர்களோடு பேசுவான்; இறைவனோடு அவர்கள் பேசுவார்கள் இந்தியாவின் மக்கள் தொகையில் 1% பேர் கவனவாழ்க்கைக்கு மாறினால் போதும்; இந்தியா அமைதிப் பூங்காவாக மாறிவிடும்.

அவ்வளவு சிறப்புக்கள் அவர்கள் பெற அடிப்படை ஏதாவது உண்டா.

அடிப்படை உண்டு. மனப்பயிற்சியை அடிப்படையாகக் கொண்ட மதத்தைச் சேர்ந்தவர்கள்,ஒரு நாளைக்கு, பிரார்த்தனை, இறைப்பாடல்களைப் பாடுவது போன்ற செயல்களை எவ்வளவு நேரம் செய்கிறார்களோ அவ்வளவு நேரத்திற்குத்தான் பலன் கிடைத்து மன அழுத்தம் குறையும். அனைத்து மத வழிபாடுகளிலும் அவர்கள் எடுத்துக்கொள்ளும் நேரம் ஒரு சில மணித்துளிகள்தான் இருக்கும். ஆனால், கவனவாழ்க்கையில்தான், காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குப் போகும் வரை மருத்துவ மனப்பயிற்சி வழிபாடாக மேற்கொள்ளப்படுகிறது. நாள் முழுவதுமுள்ள செயல்களில் முழுக்கவனம் அல்லது ஈடுபாடு செலுத்தப்படுகிறது. மன அழுத்தம் சேரச் சேர வெளியேறிக்கொண்டே இருக்கும். ஆகவேதான் கவனவாழ்க்கை வாழ்பவர்கள் பிறருக்கு எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் தீங்கு செய்ய மாட்டார்கள்.

ஆகவே அரோமணி 11-வது இயற்கை விதி “ மருத்துவ மனப்பயிற்சி செய்யும் நேரத்தின் அளவிற்கு தகுந்தாற்போல, மன அழுத்தம் குறையும், மனவளம் அதிகரிக்கும்; அறியாமை விலகும்; உடல்மன நலம் பெருகும்; வாழ்க்கைத் தரம் உயரும். ஆன்மீக ஆற்றல் அதிகரிக்கும்..

உங்கள் வாழ்க்கைப் படகு சீராக முன்னேறிச் செல்ல வேண்டுமென்றால், நீங்கள், தினசரி, கட்டாயம் மருத்துவ மனப்பயிற்சியை காலை 20 நிமிடங்கள், மாலை 20 நிமிடங்கள், இரவு படுக்கையில் படுத்துக்கொண்டே தூக்கம் வரும் வரை தவறாது செய்துவர வேண்டும். அப்படி செய்து வந்தீர்கள் என்றால், நீங்கள் பூமியில் சொர்க்கத்தைக் காண்பீர்கள்.

                  கவனவாழ்க்கை வாழுக! வளர்க வளமுடன்.
                              
                    ஹீலர் R.A.பரமன் என்ற அரோமணி.

  

                          Monday, November 5, 2018

கை கழுவாமல்

கைகழுவாமல் சாப்பிட்டு ஆராய்ச்சி---


H 201-TMH-கொசு ஒழிப்பு
     Copy of the Email submitted to all the District Collectors at 6 pm on 2-11-2018
       அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை
              57/176A6, 3-வது தெரு, பேரையூர் சாலை,
                 உசிலம்பட்டி-625532.
                  செல் எண்கள்: 9442035291, 7092209028. www.medineliving.blogspot.com; www.grace1983.blogspot.com; “Healer Aromani Videos” in the youtube.

அன்புள்ள ஐயா,
வணக்கம். மாவட்ட ஆட்சியரின் அன்பான கவனத்தை 2-11-2018 தேதியின் ‘தினத்தந்தி’ நாளிதழின் பக்கம் 11-ல் வந்த செய்தியின் பால் ஈர்க்கிறோம். அந்த செய்தியின் தலைப்பாக “டெங்கு கொசு ஒழிப்புப் பணிக்கு மாணவர்களை அழைக்கும் கலெக்டர். உற்பத்தியாகும் இடங்களை கூறினால் 5 மதிப்பெண்ணுடன் சான்றிதழும் கிடைக்கும்.” என்று வெளிவந்திருக்கிறது.

கொசு ஒழிப்புப் பற்றி ஏழு ஆண்டுகளாக (7/2010 முதல் 13-7-2018 வரை) ஆராய்ச்சி செய்து, கொசுவை முற்றிலும் ஒழிக்கும் விதமாக ஒரு எளிய முறையை நிறுவனர் அரோமணி கண்டுபிடித்திருக்கிறார்.. மக்கள் பயன்படும்படியாக, “Simple Procedure to Eradicate Mosquitoes” என்ற ஆங்கிலப் புத்தகம், சென்னை நோஷன் பிரஸ் மூலமாகவும், “கொசுக்களை ஒழிக்கும் எளிய செயல் முறை” என்ற தமிழ் புத்தகம், சென்னை கவுதம் பதிப்பகம் மூலமாகவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

நிறுவனரும் ஆராய்ச்சியாளருமான ஹீலர் R.A.பரமனு (அரோமணி) 
 டைய குடும்பத்திலுள்ளவர்கள் அனைவரும், இரண்டு ஆண்டுகளாக கொசுக்கடியிலிருந்து முற்றிலும் விடுபட்டு நன்றாக தூங்கி எழுந்திருக்கிறார்கள்.

கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள்!
எழுபது ஆண்டுகளுக்கு முன்பு பம்பாய் கக்கூஸ் என்னும் நவீன கழிப்பறைகள் கிடையாது. ஆகவே அக்காலங்களில் கொசு உற்பத்தி கிடையாது. கொசுக்களின் பெரும்பகுதி, வீடுகளில், நவீன கழிப்பறைகளுக்குக் கீழே கட்டப்பட்டுள்ள செப்டிக் டேங்க் குழாய்கள், செப்டிக் டேங்கில் தேங்கியுள்ள கசடுகள் ஆகியவற்றில்தான் உற்பத்தியாகின்றன. அதைத் தவிர, சமயலறை பாத்திரங்கள் கழுவும் தொட்டி, அதனுடைய கழிவுநீர்க் குழாய், சமயலறை கழிவுக் கூடை, குளிக்கும் அறையின் கழிவுநீர்க்குழாய், வாஸ் பேசின் கழிவு நீர்க்குழாய் ஆகிய மற்ற இடங்களாகும்; இவற்றில் சிறிதளவுதான் உற்பத்தியாகின்றன.

கொசுக்களை ஒழிக்கும் செயல்முறை விளக்கம்!
ஒவ்வொரு கழிப்பறை மலக் கோப்பையிலும் பிளீட்சிங் பவுடர் ஐந்து ரூபாய் பொட்டலம் (100 கிராம்) ஒன்றைத் திறந்து, முழுவதையும் போட்டு ஐந்து லிட்டர் நீரை ஊற்றிவிட வேண்டும். இதை காலையில் 10 மணிக்குள்ளும் இரவு 8 மணிக்குள்ளும் போடவேண்டும். தினசரி இரண்டு பொட்டலங்கள் செலவாகும். 20 கிராம் அளவுக்கு பிளீட்சிங் பவுடரை சமயலறை பாத்திரங்கள் கழுவும் தொட்டியிலும் போட்டு நீரை ஊற்றிவிடவேண்டும் மற்றும் கழிவுக் கூடையில் சிறிதளவு பவுடரைத் தூவி விடவேண்டும். குளிக்கும் அறையில் 10 கிராம் அளவுக்கு பவுடரை கழிவுநீர்க் குழாயில் போட்டு நீரை ஊற்றிவிட வேண்டும். வாஸ் பேசின் கழிவு நீர்க் குழாயில் 10 கிராம் பவுடரைத் தூவி நீர் ஊற்றிவிட வேண்டும். இவை அனைத்திற்கும் காலையில் அரை பொட்டலமும், இரவு அரைப்பொட்டலமும் தேவைப்படும். தினசரி 3 பொட்டலங்கள் தேவைப்படும். இதைத் தவறாது செய்து வந்தால், ஒரு வாரத்திற்குள் கொசு உற்பத்தி தடுக்கப்பட்டு விடும். எல்லா வீடுகளிலும் கழிவுநீர்க் குழாய்களில் பவுடரைப் போட்டு நீர் ஊற்றும்போது, சாக்கடைக் கால்வாய்களிலும் கொசு உற்பத்தி இருக்காது.

 காய்ச்சல்களைப் பற்றிய விளக்கம்.!
“டெங்குக் கொசுவினால், டெங்குக் காய்ச்சல்” என்பது மருத்துவ வணிக உலகம் மக்களை பயத்தில் உறைய வைப்பதற்காக வைத்த பெயர். இப்படி உறைய வைப்பதின் மூலம் மக்கள் மாற்று மருத்துவங்களில் (Alternative Medicines) சிகிச்சை எடுக்கப் பயப்படுகிறார்கள்.  ஏழாண்டு கால ஆராய்ச்சியில். பல நாட்கள் ஆராய்ச்சியாளர் அரோமணியை கொசுக்கள் கடிக்க அவர்   அனுமதித்திருக்கிறார். டெங்கு கொசு என்ற ஒன்று இருப்பதாக  தெரியவில்லை. அவருக்கு எந்த டெங்கு காய்ச்சலோ, பன்றிக் காய்ச்சலோ, பறைவைக் காய்ச்சலோ வந்ததில்லை.

 நோய்கள் பெரும்ப்பாலும் மழைகாலத்திலும், குளிர்காலத்திலும்தான் வருகின்றன. காரணம் என்ன? கோடைகாலத்திலும், வசந்த காலத்திலும் நமது தொழிலின் காரணமாகவும், வேறு பல காரணங்களாலும் கழிவுப்பொருட்கள் உடலில் வெளியேறாமல் தங்கிவிடுகின்றன. அந்த தேங்கிய கழிவுப் பொருட்களை ஆண்டுப் பராமரிப்பில் உடல் எடுத்துக்கொண்டு, குளிர் மற்றும் மழையினால் ஏற்படும் குளிர்ச்சியினால், உடலை சுருங்க வைத்து, உள்ளிருக்கும் கழிவுப்பொருட்களை பிழிந்து எடுத்து வெளியேற்றுகின்றன. அவ்வாறு வெளியேற்றும்போது ஏற்படும் தொந்தரவுகளைத்தான் நோய்கள் என்று சொல்கிறோம். உடல் பராமரிப்பு வேலை செய்வதை நாம் நோய்கள் என்று சொல்கிறோம். அப்படி உண்டாகும் நோய்களில் ஒன்றுதான் காய்ச்சல். பலவித காய்ச்சல்கள் கிடையாது. காய்ச்சல் ஒரே ஒரு காய்ச்சல்தான். காய்ச்சல் நோயாளியை பட்டினி போட்டு மாற்று மருத்துவங்களில் சிகிச்சை எடுத்துக்கொண்டால், காய்ச்சலிலிருந்து குணமாகிவிடலாம்.

கிருமிகளால் நோய்கள் தோன்றுவதில்லை!
“கிருமிகளால் நோய்கள் தோன்றுகின்றன; காற்றின் மூலமாகவும் நீரின் மூலமாகவும் பரவுகின்றன” என்கின்ற ஒரு தவறான கொளகையும் மருத்துவ வணிக உலகம் மக்களை பயத்தில் உறைய வைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. கிருமிகளால் நோய்கள் தோன்றுவதில்லை. உடலுக்குள் நீண்ட நாடகள் வெளியேறாமல் தங்கிவிட்ட கழிவுப் பொருட்களை தின்று அழிப்பதற்குத்தான் கிருமிகள் தோற்றுவிக்கப்படுகின்றன.

ஆறு மாதங்களாக கை கழுவாமல் சாப்பிட்டு ஆராய்ச்சி!
கை கழுவிய பிறகுதான் சாப்பிட வேண்டும் என்ற பலமான பிரச்சாரம் செய்யப்படுகிறது. அரோமணியின் ஆராய்ச்சியில், ஆறு மாதங்களாக கை கழுவாமல்தான் சாப்பிட்டு வந்திருக்கிறார். அவருக்கு எந்த தொற்று நோயும் கிருமிகளால் வந்ததில்லை. நன்றாகத்தான் இருக்கிறார். அவருடைய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று இணைக்கப்பட்டிருக்கிறது.   

கொசுவை ஒழித்தால் மட்டும் போதாது, நோய்கள் பற்றிய மக்களுக்கிருக்கும் அறியாமையைப் போக்கி, விழிப்புணர்வையும் ஏற்படுத்த, வேண்டும்.

“கொசுக்களை ஒழிக்கும் எளிய செயல் முறை” புத்தகத்தில் சொன்னபடி செயல்முறையை செய்து வரும் போது கொசுக்களை முற்றிலும் ஒழித்துவிட முடியும். ஆகவே அப்புத்தகத்தை அரசுத் துறைகளில் உள்ள புத்தகப் படிப்பகங்களுக்கும், அரசு உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் ஆகிய படிப்பகங்களுக்கு வாங்குவதற்கு உத்தரவும் மற்றும் தனியார் உயர்நிலைப்பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் வாங்குவதற்கு அறிவுறுத்தவும் ஆவண செய்ய வேண்டுமாய் அன்புடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.
                                             இப்படிக்கு
                                          தங்கள் உண்மையுள்ள 
                                   ஹீலர் R.A.பரமன் (அரோமணி)  
       சூப்ரண்டிங் எஞ்சினியர் (ஓய்வு)/தமிழ்நாடு மின்சார வாரியம்.
    அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனைக்காக           
                                                  2-11-2018
இணைப்பு-
‘தினத்தந்தி’ செய்தியின் நகல் Friday, October 26, 2018

செரிக்க விதி 10

A 203-MLM-அ.11 விதிகள்-இ.ம
         TO READ IN ENGLISH PLEASE CLICK ARO MEDICINE-ENG BELOW.
அரோமணியின் 10-வது விதி-செரிக்க,பசி உண்டாக,  மலச்சிக்கல் நீங்க, மருந்தில்லா மருத்து.
           
ARO MEDICINE-ENG      அரோமணியின் 10-வது விதி: செரிக்க, பசி உண்டாக, மலச்சிக்கல் நீங்க,  மருந்தில்லா மருத்து., 
இரட்டை மருத்துவத்தில் அரோமணியின் 10-வது இயற்கை விதி

.கடந்த ஓராண்டாகவே, எனக்குள் “உணவை வயிற்றில் நிரப்பிவிட்டு, அலுவலகத்தில் மூளை சார்ந்த வேலைகளை செய்வது அறிவியல் ரீதியாக சரியா? காரில் பெட்ரோல் டேங்கில், பெட்ரோலை நிரப்பி செட்டில் அடைத்து வைப்பதறகும் இதற்கும் என்ன வேறுபாடு இருக்கப்போகிறது!” இந்த கேள்வி வந்து கொண்டே இருந்தது. 5-10-2018 அன்று இறைவன் என்னை ஆராய்ச்சிக் களத்தில் இறக்கிவிட்டான். அன்றையிலிருந்து காலை, மாலை ஆகிய இருவேளையும் சாப்பிட்ட பிறகு எனது நடைப்பயிற்சியை மேற்கொண்டேன். என்னை நீண்டகாலமாக வருத்திக் கொண்டிருந்த மலச்சிக்கலிலிருந்து விடுபட்டேன். பசி அதிகரித்திருப்பதையும் உடல் வலிமை பெற்று வருவதையும் உண்ருகிறேன். நான் இப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

10-அரோமணி விதி, “வெறும் வயிற்றில் செய்யும் உழைப்புக்கு (அல்லது உடற்பயிற்சிக்கு அல்லது நடைப்பயிற்சிக்கு) செலவழிக்கும் நேரத்திற்குத் தகுந்தாற்போல, உடல் பலவீனப்படும், பலவீனப்பட்ட உடலில், புதிய நோய்கள் தோன்றும், பழைய நோய்கள் தீவிரம் காட்டும்.

ஆதிகாலத்தில்,மற்ற உயிரினங்களோடு மனித இனமும் பகலில் இரை தேடுவது, இரவில் ஓய்வு என்ற முறையில்தான் வாழ்ந்திருக்கிறார்கள். இரை தேடுவதில் உழைப்பு முதன்மை பங்கு வகிக்கிறது. உழைப்பு, வயிற்றில் போட்ட உணவை செறிக்கச் செய்கிறது; செறித்தலால் கிடைக்கும் ஆற்றல் உழைப்புக்குப் பயன்படுத்தப்படுகிறது. உழைப்பு முடியும் தருவாயில் பசி தூண்டப்படுகிறது;  பசி எடுத்தவுடன் உணவு உட்கொள்கிறான். மீண்டும் உழைக்கச் சென்றுவிடுகிறான். ஆதிகால மனிதனின் வாழ்க்கை சுழற்சி இதுதான்.

நாகரீக வளர்ச்சியில் மனிதனின் வாழ்க்கை சுழற்சி மாறியது போலக் காணப்பட்டாலும், அடிப்படை மாறாமல்தானிருக்கிறது. உழைப்பு x ஓய்வு என்பது மாறவில்லை. எது மாறியிருக்கிறது என்றால், உடலால் உழைக்கும் உழைப்பு குறைந்து, மூளையால் செய்யும் உழைப்பு அதிகமாகிவிட்டது. உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கையை நோக்கி மனித இனம் போய்க் கொண்டிருக்கிறது. பள்ளிக்கூடங்களில் உடற்பயிற்சிக்குரிய வகுப்பு எடுக்கப்பட்டு, அந்த நேரத்தையும் படிப்புக்கு எடுத்துக்கொள்கிறார்கள். மாலையில் வீட்டுக்கு வந்து பெண்பிள்ளைகளும், பையன்களும் வெளியில் சென்று தோழிகளுடனும் நண்பர்களுடனும் விளையாடும் பழக்கமும் மறைந்து அந்த நேரத்தில், வீடியோ கேம்ஸ் விளையாடவும், TV பார்க்கவும் செய்கிறார்கள். இப்படி உடலுழைப்பு மறைந்து அதற்குப் பதில், உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சியை மக்கள் மேற்கொள்கிறார்கள்.

இரவில் உண்ட உணவின் ஆற்றலில்,  பெறும்பகுதி, இரவில்,  உடல் உறுப்புகளில் உள்ள சிறு சிறு பழுதுகளை செப்பனிட்டு சரி செய்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள ஒரு பகுதி, தசைகளில் சேமித்து வைக்கபடுகிறது. மற்றொரு பகுதி, காலையில் இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கும், குளித்து முடிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. பிறகு காலையில் உணவு உட்கொள்கிறோம். உழைக்கச் செல்கிறோம். 

சாப்பிட்டுவிட்டு நடைப்பயிற்சி செய்யும் பொழுது அது உழைப்பாகிவிடுகிறது. நடைப்பயிற்சியின்போது மேல் மூச்சு கீழ் மூச்சு ஏற்படுகிறது. அதாவது காற்று வேகமாக உள்ளே சென்று வெளியில் வருகிறது. அதனால் வயிறு அதிகமாக சுருங்கி விரிவடைவதோடு, வேகமும் அதிகரிக்கிறது; உணவு நன்கு நொறுக்கப்படுகிறது; அரைபடுகிறது; தண்ணீர் சுழற்சி ஏற்பட்டு உணவோடு நன்கு கலக்கப்படுகிறது. சுரப்பி நீர்களும், ஹைடிரோ குளோரிக் அமிலமும் நன்கு கலக்கப்படுகிறது. நடப்பதால் உடல் உறுப்புகளின் உராய்வினால், வெப்பம் உற்பத்தியாகி, ஆக்சினால் உணவு நன்கு எரிக்கப்பட்டு செரித்தல் நன்கு நடந்தேறுகிறது. தவிர, ஏற்கனவே தேங்கியுள்ள கழிவுபொருட்களான கெட்ட நீர், வியர்வையாகவும், சிறுநீராகவும் வெளியேறுகிறது; வாய்வு, வாய்வாகவும், வாய்வு ஏப்பங்களாகவும் சளி, சளியாகவும் வெளியேறுகிறது. மேலும், செரித்தலின்போது உற்பத்தியாகும் கழிவுப்பொருட்களான மலம், கெட்ட நீர், வாய்வு, முதலியன பெருங்குடலில் மேலே குறிப்பிட்ட படி குடலில் மேலிருந்து கீழே தேங்குகின்றன. நடைப்பயிற்சியால், வயிறு சுறுங்கும்போது கழிவுப்பொருட்களுக்கு அழுத்தம் கொடுத்து கீழே தள்ளுகின்றது. காலையில் முதலில் வாயு வெளியேறுகிறது. அதற்கு பிறகுதான் மலம் வெளியேறும். நடைபயிற்சி இல்லாவிட்டால், மலத்தை வெளியேறவிடாமல், வாயு தடுத்து நிறுத்தி விடும்; அதனால்தான் மலசிக்கல் ஏற்படுகிறது. 

காலையில், இயற்கை உபாதைகளைக் கழித்துவிட்டு (,வாய்வு, சிறுநீர், மலம் ஆகிய கழிவுப் பொருட்களின் வெளியேற்றம்)  நடைப்பயிற்சியை காலையில், வெறும் வயிற்றில் மேற்கொள்ளுகிறோம்.

அதிகாலையில் ஒரு காப்பி குடித்து விட்டு, வெறும் வயிற்றில்  நடந்தால் நோய்கள் வரும், எப்படி? உழைப்பு என்னும் நடை பயிற்சி 3 பணிகளை செய்கிறது. 1. உணவை செரிக்க செய்கிறது.2. கழிவு பொருட்களை வெளியேற்றுகிறது. 3. மலத்தையும், வாய்வையும் குடலில் கீழ் நோக்கி இறங்க செய்து, காலையில் மலம் சுலபமாக இறங்க வழி செய்கிறது.


வெறும் வயிற்றில் நடக்கும்போது, 1. உணவு இல்லை செரிப்பதற்கு. காப்பி. முழு உணவாகாது. 2. புறப்படுவதற்கு முன்பு..வாய்வு, சிறுநீர், மலம் ஆகியவை வெளியேறி விட்டது. ஆகவே கழிவு பொருட்கள் வெளியேற ஒன்றும் இல்லை. 3. குடலில் இறங்க மலமோ, வாய்வோ இல்லை. ஆக வெறும் வயிற்றில்  நடக்கும் போது, 3 பணிகளும் செய்ய வாய்ப்பில்லை. அதாவது, எந்த பயனும் இல்லாமல் உடலின் ஆற்றல் வீணடிக்க படுகிறது. .

மற்றொரு இழப்பும் ஏற்படுகிறது. அந்த நடைக்கு ஆற்றல் செலவாகிறது. அந்த ஆற்றல் எங்கிருந்து கிடைக்கிறது? செல்கள், அதன் சேமிப்பில் இருந்து கொடுக்கிறது. சேமிப்பு குறைவதால் உடல் பலவீனம் ஆகிறது. அது நோய்களை கொண்டு வருகிறது. சேமிப்பு கணக்கிலிருந்து பணம் எடுத்தால், பொருளாதார நிலை கூடுமா, குறையுமா! ஆகவே, காலையும் மதியமும் சாப்பிட்ட பிறகு நடப்பதுதான் உடல் மன நலத்திற்கு. சிறந்தது.


ஆனால், உணவை வயிற்றில் நிரப்பிவிட்டு, டூ வீலரிலோ, காரிலோ, பஸ்ஸிலோ சென்று அலுவலகத்தில் உட்கார்ந்து மூளை சார்ந்த வேலையைத் தொடங்கிவிடுகிறீர்கள். அவ்வாறு வேலை செய்யும்பொழுது, சுவாசம் சீராககத்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்தச் சுவாசம் செரித்தலை விரைவு படுத்தப் போதுமானதல்ல; வெப்பம் உற்பத்தியாவதில்லை; நீர் சுமாரான அசைவற்ற நிலையில்தான் இருக்கிறது. அதனால் நீர் சுற்றிவந்து அரைப்பது சீராக இருக்காது. இவ்வாறு ஐம்பூதங்களின் செயல்பாடும் முடங்கிய நிலையில்தானிரிருக்கிறது. மேலும் உற்பத்தியாகும் கழிவுப்பொருட்கள் வெளியேறாமல், தங்கிவிடுகின்றன. அவை தங்கும்போதுதான் மலசிக்கல் ஏற்படுகிறது..
  நாம் செய்யும் பணியிலேயே நடைப்பயிற்சியை இணைப்பதின் மூலம் நடைப்பயிற்சிக்கென்று தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை.

இரவில் சாப்பிட்ட பிறகு உடற்பயிற்சி செய்ய வேண்டும், ஏன்?
பகலில் 30 நிமிடங்கள் உட்பயிற்சி செய்தால், இரவில் மூன்றில் ஒரு பங்கு அதாவது 10 நிமிடங்கள் உடற்பயிற்சி or நடை பயிற்சி. செய்ய வேண்டும். 30 நிமிடங்கள் செய்யும் போது, இரவில் பசி எடுத்து தூக்கம் கெட்டுவிடும்.

அவ்வாறு 10 நிமிடங்கள் உடல் பயிற்சி செய்யும்  போது வாயுவும், வாய்வு ஏப்பங்களும், சளியும் வெளியேறும். அவை வெளியேறுவதால், இரவில் ஏற்படும் மூக்கடைப்பு, நெஞ்சு கரிப்பு, நெஞ்சு வலி, மூச்சு திணறல், போன்ற தொந்தரவுகள் இருக்காது. காலையில் சுலபமாக மலம், வாய்வு வெளியேற குடலில் அவை கீழே இறங்குகிறது


ஆகவே, அரோமணியின் 10-வது விதியின் படி வெறும் வயிற்றில் உடலுழைப்போ, உடற்பயிற்சியோ அல்லது நடைப்பயிற்சியோ செய்யக் கூடாது. உடலுழைப்புத்தான் செரித்தலை நல்ல முறையில் நடந்தேற வைக்கிறது. செரித்தல் நல்ல முறையில் அமைந்துவிட்டால், மற்ற உடல் நலத்துக்குரிய அனைத்து செயல்களும் அதாவது கழிவுப்பொருள் வெளியேற்றம், அதைத்தொடர்ந்து வரும் பசி, தூக்கம் ஆகிய அனைத்தும் தானாகவே நன்றாக அமைந்து விடும். அனைத்து நோய்களுக்கும் மூலகாரணமான மலச்சிக்கல் இருக்காது; உடல் வலிமை பெறும்.

                     கவனவாழ்க்கை வாழுக! வளர்க வளமுடன்!

Wednesday, September 12, 2018

தற்கொலைக்கு மூல வேர்

B 204-MM 1-மருத்துவ மனபயிற்சி 1
            அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை,
              57/176A6, மூன்றாவது தெரு, பேரையூர் சாலை,
          உசிலம்பட்டி-625532.  செல் எண்கள் : 9442035291, 7092209028
.
அன்புள்ள ஐயா,
வணக்கம். நான் தினத்தந்தி சந்தாதாரர். 10-8-2018 நாளிதழில், கட்டுரை பகுதியில், முனைவர் மு.யூசின் ரோசிட்டா  எழுதிய “வாழப் பிறந்தோமே….!” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறீர்கள். தற்கொலைக்கு காரணத்தைத் தேடி அலைய வேண்டியதில்லை. அனைத்து விதமான தற்கொலைகளுக்கும் மூல வேர் மனவழுத்தில்தான் இருக்கிறது. அவ்வழுத்தத்திலிருந்து விடுபட, ஆசிரியர் கூறுகின்ற, சிறந்த மன நல ஆலோசனை பெறுதல், ஆதங்கத்தை பிறரிடம் கொட்டித் தீர்த்தல், போன்றவை சிறந்த பலனைத் தரும் என்று சொல்ல முடியாது.

மக்கள் அனைவரையும் சிறந்த மனப்பயிற்சி பெற வழிவகை செய்து மனவளத்தைப் பெருக்க வேண்டும். நமது வழிபாட்டு முறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும். நமது மக்கள் கோயில்களுக்குச் சென்று சாமி உருவத்தைப் பார்த்துவிட்டு, பிறகு திருநீரைப் பூசிவிட்டு வருவதுதான் வழிபாடு என்று நினைத்து ஆலயத்தை விட்டு வந்துவிடுகிறார்கள். அப்படி வரக்கூடாது, ஆழ்வார்களும், நாயன்மார்களும், மற்ற மதப் பெரியவர்களும் இறைவனைப் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள் ஆலயத்திலேயே உட்கார்ந்து,,அவற்றிலிருந்து இறைப்பாடல்கள் ஒன்றிரண்டைப் பாடலாம். கடவுளை வேண்டிப் பிரார்த்தனை செய்யலாம். மருத்துவ மனப்பயிற்சி செய்யலாம். இந்த மாதிரி செயல்களில் ஒரு அரை மணி நேரம் செலவிட்டு, அதற்குப் பிறகு பிரகாரத்தை ஒன்பது முறை கடவுளின் எண்ணத்தை மனதில் கொண்டு சுற்றி வரலாம். இந்த மாதிரி வழிபாட்டில் மனவளம் பெருகும்; மனவழுத்தம் குறையும். அவர்கள் வீடுகளில் தினசரி காலையும் மாலையும் இதேபோல கடவுள் வழிபாடு செய்து வர வேண்டும். இது ஒரு வகை மனவழுத்தத்தைப் போக்கும் வழி முறையாகும்.

மற்றொரு சிறந்த வழிமுறையை சொல்லப் போகிறேன். கிராமத்தில் இரு பெண்கள் சண்டை யிட்டுக் கொள்ளும் பொழுது, உண்மையில் பாதிக்கப்பட்ட பெண் “நீ எனக்குப் பண்ணின கொடுமையை நினைக்கும்போது, என் நெஞ்சு கணக்குது!” என்று வேதனையுடன் சொல்வதை அறிந்திருக்கலாம். அதற்கு என்ன பொருள், அவளுக்கு உள்ள மனவழுத்தம்  வேதனையாக மாறி,, அந்த வேதனை நெஞ்சில் நிறைந்து கணத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் பொருளாகும். அதாவது எப்படிப்பட்ட மனவழுத்தமாக இருந்தாலும், அது நெஞ்சில் அதாவது மார்பில்தான் வந்து சேர்கிறது. மார்பில் சேர்ந்துள்ள மனவழுத்தத்தைப் போக்க எல்லாம் வல்ல இறைவன் எனக்கு ஒரு மருத்துவ மனப்பயிற்சியை (மம) வெளிப்படுத்தினான்.

’தினத்தந்தி’ நாளிதழ் வாயிலாக மக்கள் மனநலம் பெற அந்த மருத்துவ மனப்பயிற்சியை இங்கு சொல்லித்தரப்போகிறேன். .
நாற்காலியில் வசதியாக உட்கார்ந்து கொள்ள வேண்டும். தலையை சுவற்றில் சாயாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தலையை இலேசாக கீழே சாய்ந்தவாறு இருக்கட்டும். உடல் தளர்வாக இருக்கட்டும். இடுப்புப் ’பெல்ட்டும்’ தளர்வாக இருக்கட்டும். மெதுவாகக் கண்களை மூடவும். ஒரு இருபது நொடிகள் எண்ணங்கள் இல்லாத வெறும் மனமாக வைத்திருந்து,கண்களை மெதுவாக மூட வேண்டும். அதற்குப் பிறகு மம ஆரம்பிக்கும்போது பயிற்சி நன்றாக அமைந்து விடும்.

இப்பொழுது மனக்கண்ணால் மார்பைப் பார்க்கவும். பிறகு மார்பு சுருங்கி விரிவதைப் பார்க்கவும். அதோடு மனவழுத்தத்தால் ஏற்பட்ட கணம் அல்லது இறுக்கம் அல்லது மார்பை பிடிக்கும் உணர்வையும் சேர்த்து நினைக்கவும். அப்படி நினைத்துக் கொண்டிருக்கும்போதே, வேறு எண்ணம் (வீட்டைப்பற்றி, குழ்ந்தைகளைப் பற்றி…….) வரும். அந்த எண்ணத்தை நிறுத்திவிட்டு, மீண்டும் மார்பு சுருங்கி விரிவதையும், மனவழுத்தக் கண உணர்வையும் நினைக்க வேண்டும். இப்படி எண்ணங்களை நீடிக்க விடாமல், தடுத்து நிறுத்தி மார்பு சுருங்கி விரிவதையும், மனவழுத்தக் கண உணர்வையும் மீண்டும் மீண்டும் நினைக்க வேண்டும். நீங்கள் பயிற்சி செய்யச் செய்ய, மனவழுத்தம் உங்களை விட்டு வெளியேறிக்கொண்டே இருக்கும். மனவழுத்தம் முழுவதும் நீங்கும்போது உங்கள் மனம் இலேசாக இருக்கும். உங்கள் மனதில் மகிழ்ச்சி பொங்கும்.

உங்கள் மனதில் உள்ள மனவழுத்தத்திற்குத் தகுந்தாற்போல, குணமாக, பத்து நிமிடத்திலிருந்து நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆகலாம். இடையில் யாராவது பார்க்க வந்தால், பயிற்சியை ஐந்து நொடிகள் நிறுத்திவிட்டு, மெதுவாகக் கண்களைத் திறந்து அவரிடம் பேசி அனுப்பிவிட்டு, மீண்டும் மம-வைத் தொடரலாம்.

வீட்டைத் தினசரி பெருக்கிச் சுத்தப்படுத்துவதைப்போல, நமது மனதையும் அன்றாடம் பெருக்கி, சேர்ந்துள்ள மனவழுத்தத்தை நீக்கிச் சுத்தப்படுத்த வேண்டும். காலையில் எழுந்ததிலிருந்து மதியம் 12 மணிக்குள் மம-வை பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள் செய்ய வேண்டும்; 12 மணிக்கு மேல் இரவு 8 மணிக்குள் பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள் செய்ய வேண்டும். இரவு படுக்கையில் படுத்துக் கொண்டே தூக்கம் வரும் வரை செய்ய வேண்டும்.

மிகவும் முற்றிய மனவழுத்தத்தைக் கொண்ட  (Depression) இருவரை மேற்குறிப்பிட்ட மம-வைக் கொண்டுதான் குணப்படுத்தியிருக்கிறேன். பனிரெண்டு வயதில் மனவழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பையன் 20 வயது வரை யாரிடமும் சொல்லாமல் தன்னுடைய குடும்பம் உட்பட, தனக்குள்ளே வைத்து மிகவும் வேதனையிலிருந்தான். திருமணத்தைத் தள்ளிப் போட்டுக்  கொண்டு வந்தான். என்னிடம் சிகிச்சை எடுத்த பிறகு நலமாகி, திருமணத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறான். மதுரையில் உள்ள கல்லூரி பேராசிரியர் ஒருவர் மனவழுத்தத்திற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு நலம் பெற்றார். தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறவேண்டும் என்பதற்காக தான் நடத்தும் பத்திரிகையில் ஒரு கவிதை மூலம் மம-வை வெளியிட்டார். அந்தக் கவிதை இதோ:
“இயல்பாய் அமர்ந்து கண்களை மூடி
எண்ணங்கள் விலகிய மனதைப்  பெறுவோம்
இயல்பாய் சுவாசம் நடக்கும் நிகழ்விலே
மார்பும் வயிறும் சுருங்கி விரியுமே
அந்தக் காட்சியை மனதில் இருத்தி
எண்ணத்தை ஆங்கே குவியச் செய்வோம்.
குறுக்கிடும் சிந்தனைகள் அனைத்தும் அகற்றி
அந்நிலை காப்போம் இருபது நிமிடங்கள்
ஒரே சிந்தனையில் இருக்கும் இத்தியானம்
பெரிதும் நல்லதாம். உடல் உள்ள நலத்திற்கு!”

மேலே குறிப்பிட்ட மனப்பயிற்சியை செய்து வரும்போது, மனவழுத்தம் முற்றிலும் நீங்கிவிடுகிறது. மனம் இலேசாக ஆகிறது; முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கிறது; கணவன் மனைவி ஆகிய இருவரிடையே அன்பு அதிகரிக்கிறது; இறைவனின் இருப்பை உணரமுடிகிறது; இறைவன் எந்தச் சூழ்நிலையிலும் கை விட மாட்டான் என்ற நம்பிக்கை வலுக்கிறது; ஆகவே எதிர்காலத்தைப் பற்றிய பயம் நீங்கிவிடுகிறது; குடும்பம் முன்னேறுவதற்குரிய சூழ்நிலை உருவாகிறது. இன்னும் பல நேர்மறை மாற்றங்கள் ஏற்படுவதை சொல்லிக் கொண்டே போகலாம். தாங்கள் எனது மடலை, மக்கள் பத்திரிகையான ‘தினத் தந்தி’ யில் வெளியிட்டு மக்களை மனவழுத்தத்திலிருந்து விடுவிக்க வேண்டுமென்று அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறென்.
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
R.A.பரமன் என்கின்ற அரோமணி 11-9-2018

இணைப்பு: ஒன்று  book 1-brochu

“சிறுநீரக கல்


“சிறுநீரக கல்லை தடுக்க!
A 205-MLM-அ.11 விதிகள்
அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை,
              57/176A6, மூன்றாவது தெரு, பேரையூர் சாலை,
          உசிலம்பட்டி-625532.  செல் எண்கள் : 9442035291, 7092209028
.
அன்புள்ள ஐயா,
வணக்கம். நான் தினத்தந்தி சந்தாதாரர். 3-8-2018 நாளிதழில், தலையங்கம்./கட்டுரை பகுதியில், டாக்டர்.சவுந்திர ராஜன் எழுதிய “சிறுநீரக கல் பாதிப்பைத் தடுக்க என்ன வழி? என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறீர்கஅந்தக் கட்டுரையில் “சிறுநீரகக் கல் வராமலிருக்க காலையில் வெறும் வயிற்றில் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்” என்று கூறியிருக்கிறார். இது தவறான கருத்து.. இன்று மக்கள் தாகம் எடுக்காமல் அதிகத் நீர் அருந்துவதால்தான், சிறுநீரகக் கல்லால் (kidney stone) பாதிக்கப்பட்ட நோயாளிகளும், சிறுநீரகச் செயலிழப்பு (kidney failure) நோயாளிகளும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறார்கள்.

தாகம் எடுத்துத் நீர் அருந்தும்போது, அந்த நீர் முழுவதையும் உடல் பயன்படுத்தி விடுகிறது. தாகம் எடுக்காமல் குடிக்கும் தண்ணீர், உடலின், தசைகளில் உள்ள மினரல்ஸ் (minerals), வைட்டமின் (vitamin) ஆகியவற்றை அரித்து, மாசுக்களையும் சேர்த்துக் கொண்டு, இரத்தத்துடன் சென்று ஆங்காங்கே தங்கிச் செல்லும்போது, அரித்த மினரல்ஸ்யும், வைட்டமின் மற்றும் மாசுக்களையும் டெபாசிட் செய்கிறது. டெபாசிட் செய்யும் இடங்களுக்குத் தகுந்தாற்போல, வயிற்றுக் கல், சிறுநீரகக் கல் என்ற பெயர்களைப் பெறுகிறது. இதுதான் கற்களின் வரலாறு.

தாகம் எடுக்காமல் குடிக்கும் தண்ணீர், உடலுக்குத் தேவயில்லாத தண்ணீர். ஆகவே அந்த நீரை வெளியேற்ற இருதயம், இரத்தம் கல்லீரல், தோல், சிறுநீரகம், முதலியன அதிகம் வேலை செய்ய வேண்டியதிருக்கிறது. அதனால் அந்த உறுப்புகள் அதிக வேலை செய்வதால் பழுதாகி நோய்களாக வெளிப்படுகின்றன. இருதய செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு, மற்றும் பல்வேறு நோய்கள், (என்னுடைய இணைப்புக் கட்டுரைகளில் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்) தாகம் எடுக்காமல் குடிக்கும் நீரால்தான் தோன்றுகின்றன.

என்னுடைய ஆராய்ச்சியின் படி, குளிர் காலத்தில் 500 மிலி, கோடைகாலத்தில் 1000 மிலி மற்றும் வசந்தகாலத்தில் 700 மிலிதான் எனக்குத் தேவைப்பட்டது. இப்படி வானிலை மாற்றம், உழைப்பு, உணவு, உடல் நிலை ஆகியவற்றிற்குத் தகுந்தாற்போல, மேலே குறிப்பிட்ட அளவுகளில் சிறிது வேறுபடலாம். ஒரு நிலையான அளவு நீரை எல்லாக் காலங்களிலும் அருந்துவது நோய்கள் தோன்றுவதற்கு வழி வகுக்கும்.
இப்படிக்கு
ஹீலர் R.A.பரமன் என்ற அரோமணி
3-9-2018  
இணைப்பு-2