Friday, August 25, 2017

வல்லரசு நாடா?

D 209-TMS- திருநீறு பூசுவது வழிபாடு ஆகாது!

இந்தியா வளர்ந்த, வல்லரசு நாடாக மாற, மக்கள் ஆற்றவேண்டிய கடமை என்ன?

உடற்பயிற்சியையும், மனபயிற்சியையும் இணைந்து செய்து மனிதனின் ஆற்றலைப் பலமடங்கு பெருக்கிக்கொள்ளும் அறிவியல் முறையே ஆன்மீகமாகும். அப்படி கிடைக்கும் ஆற்றலே ஆன்மீக ஆற்றலாகும். உடற்பயிற்சி மற்றும் தியானம் என்னும் மனப்பயிற்சி ஆகிய இரண்டும் சேர்ந்ததுதான் யோகாவாகும் (Yoga).

பிராமணர்கள் கோயில்களில் பக்தர்களுக்கு அர்ச்சனைகள் செய்வதின் மூலமும்வீடுகளில் காலையில் சூரிய நமஸ்காரம், மூன்று வேளையும்சந்தியா வந்தனா மூலமும், ருத்ராட்ச மாலையில் ஒவ்வொரு பாசியாக உருட்டி 108 தடவைஓம் நமசிவாயா சொல்லி மூன்று வேளையும் மற்ற சடங்குகளிலும் மனப்பயிற்சியை முக்கிய  கடமையாக சிரமேற்கொண்டு செய்கிறார்கள். ஆகவே அவர்கள் பலதுறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். மனப்பயிற்சியை தங்கள் வழிபாட்டில் இணைத்துள்ள, மற்ற மதத்தவர்கள் பல மடங்கு முன்னேறியவர்களாகத் திகழ்கிறார்கள்.

2.             ஆனால் மக்கள் சாமியை பார்த்து, திருநீரு பூசிவிட்டு வந்துவிட்டால் வழிபாடு முடிந்ததாக எண்ணி ஆலயத்தைவிட்டு வெளியில் வந்துவிடுகிறார்கள். பூஜை செய்கிறார்கள் மற்ற மனப்பயிற்சி சாராத வழிபாடுகளைச் செய்கிறார்கள். இதனால் மாற்றம் ஏதாவது நிகழ்ந்திருக்கிறதா! இல்லையே! வழிபாடு செய்துகொண்டே, ஏமாற்றுகிறார்கள்; வழிப்பறி செய்கிறார்கள்; கொள்ளையடிக்கிறார்கள், குழந்தைகளையும், பெண்களையும் கடத்துகிறார்கள்; பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள் இன்னும் பல எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் பல கெடுதல்களைச் செய்கிறார்கள் இப்பொழுதுள்ள வழிபாட்டு முறைகளில்; ஆன்மீக ஆற்றல் பெருக சிறிதுகூட வாய்ப்பில்லை. ஆகவே ஆலயத்திற்குப் போகும் ஒவ்வொருவரும் அங்கேயே உட்கார்ந்து முப்பது நிமிடங்களுக்குக் குறையாமல், இறைவனைப்பற்றிய பாடலைப்பாடி, பிரார்த்தனை செய்யவேண்டும்; ஆழ்மனப்பயிற்சி ((MEDITATION) செய்யலாம்; திருக்குறள் பாடல்களைப் படிக்கலாம்; பகவத்கீதை, திருவாசகம், தேவாரம், திருமந்திரம் ஆகியவற்றிலிருந்தும் பாடலாம். இந்த மனபயிற்சி முடிந்தவுடன் பிரகாரத்தை 9 முறைகள் சுற்றிவரக்கூடிய உடற்பயிற்சியை செய்யவேண்டும். இவ்வாறு மனபயிற்சியும் உடற்பயிற்சியும் இணைந்து செய்யும்பொழுதுதான் மக்களுக்கு ஆன்மீக ஆற்றல் பெருகி ஓடும். இதையே கூட்டாகச் செய்யும்போது ஆன்மீக ஆற்றல் பலமடங்கு பெருகும்.

3.             இந்த ஆண்டு (2015) மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்குவதை பார்க்க லடசக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடியிருந்ததை பார்த்தபொழுது எனக்குள்ஆஹா! இந்தக் கூட்டத்தை அப்படியே உட்கார வைத்து ஒரு 15 நிமிடங்கள் மனப்பயிற்சி செய்ய ஏற்பாடு செய்திருந்தால், அளவிடமுடியாத ஆன்மீக ஆற்றல் பெருகியிருக்கும்! தமிழன் சவுதியிலும், மலேசியாவிலும் பாதாளச் சிறைகளில் சவுக்கடிகளை முத்தமிட்டிருக்கமாட்டானே!” என்ற எண்ணம் எனக்குள் எழுந்து வேதனையை கிளப்பி விட்டது.

4.             நீங்கள் எந்த சாமியை வழிபட்டாலும், அந்த வழிபாடு உங்களுக்குள் இருக்கும் இறைவனிடம்தான், போய்ச் சேரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவன் உங்களுக்குள்ளிருந்துதான், வழிபாட்டு பலன்களை அள்ளி அள்ளி வழங்குகிறான். இதை அறியாததால்தான் மதங்களின் பெயரால் மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு, தங்களைத் தாங்களே அழித்துக்கொள்கிறார்கள்எப்பொழுது நமது வழிபாட்டில் மனபயிற்சிக்கு இடம் கொடுக்குறோமோ அப்பொழுதுதான் இந்தியா வளர்ந்த, வல்லரசு நாடாக மாறும்.

5.             அதற்கு அரசுதான் கோவில்களில் மனபயிற்சியின் முக்கியத்தை எடுத்துரைத்து, கூட்டாக மனபயிற்சி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். எந்த மதச்சடங்காக இருந்தாலும், சடங்குக்கு முன்பு இறைப்பாடல், பிரார்த்தனை ழச ஆழ் மனப்பயிற்சி (ஆநுனுஐவுயுவுஐழுN)  அதற்குப்பிறகுதான் சடங்கு என்று இருக்கும்படியாக வழிபாட்டு முறைகள் அமையவேண்டும். எந்த மதச்சடங்கும் மனபயிற்சி மற்றும் உடற்ப்பயிற்சி இல்லாமல் ஆரம்பிக்க கூடாது.. இதேபோல பள்ளிக்கூடங்களில் மனபயிற்சிக்குப் பிறகுதான் மாணவர்கள் வகுப்பறைக்குள் நுழைய வேண்டும். தமிழ்நாட்டில் மாணவர்களை கடவுள் வாழ்த்து, ஒழுக்கம், வாய்மை ஆகிய 3 திருக்குறல் அதிகாரங்களின் 30 பாடல்களை மனதில் பயிற்சி செய்ய வேண்டும். மாலையில் பள்ளி முடியும்போதும் இதே குறட்பாக்களைச் சொல்லிவிட்டுத்தான் வகுப்பறைகளை விட்டு வெளியேற வேண்டும். இதேபோல, அனைத்து அலுவலகங்களிலும் இதே முறையில் காலை மாலை நேரங்களில் மனப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்யலாம்.

6.             மகான்கள் மகரிஷி மகேஷ் யோகி, ஒஷோ, ரவிசங்கர்ஜி, மாதா அமிர்தமாயியை, பிரம்மகுமாரிகள், குரு ராம் பாபுதேவ், இராமகிருஷ்ணா மிஷன் இன்னும் வெளியில் வராத சிறு சிறு மனப்பயிற்சியை பரப்பும் சாமியார்கள், தென்னிந்தியாவில் வள்ளலார், வேதாத்திரி மகரிஷி, ஜக்கி வாசுதேவ் போன்றோர்கள் மனப்பயிற்சியை பரப்பி, மனப்பயிற்சி செய்வோர்களின் எண்ணிக்கையை 20-ம் நூற்றாண்டில் இந்தியாவில் அதிகரிக்கக் காரணமாக இருந்தார்கள். மனப்பயிற்சி செய்வோர்களின் எண்ணிக்கை கூடியதால்தான். அரசியலின் ஊழல்கள், அதிகாரிகள் மற்றும் சமூகவிரோதிகள் செய்யும் தவறுகள் தினசரி செய்தியாக வந்தவண்ணம் இருக்கிறது. குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு அரசியல்வாதிகளும் சிறைச்சாலைக்கு அனுப்பப்படுகிறார்கள்.

7.             .நா.சபை சூன் 21-ந் தேதியையோகா தினமாக அறிவித்ததால், உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் யோகாப் பயிற்சியை மேற்கொண்டார்கள். இந்தியாவில் டெல்லியில் மட்டும் பிரதமர் தலைமயில் 37 ஆயிரம் பேர்களும், அனைத்து மாநிலங்களிலும் லடசக்கணக்கானோர்கள் இந்த யோகா பயிற்சியில் பங்கெடுத்துக் கொண்டார்கள். அன்று நடந்த கூட்டு யோகாப்பயிற்சியால் உலகம் முழுவதும் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. இந்தியாவிலும் மிக மிக முக்கிய அரசியல் பிரமுகர்கள் செய்த தவறுகள் வெளிவந்தன; ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

யோகப் பயிற்சியை முதலில் மாதத்திற்கு ஒருமுறையும், பிறகு வாரத்திற்கு ஒருமுறையாக மாற்றி, இறுதியாக தினசரி இருமுறையாக கொண்டு வர வேண்டும்இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் நடைபெற நடுவன் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அதன்மூலம் ஆன்மீக ஆற்றல் பெருக்கெடுத்து ஓடும். அரசின் திட்டங்களானதூய்மை இந்தியா (CLEAN INDIA)இந்தியாவில் உற்பத்தி (MAKE IN INDIA)”, “டிஜிடல் இந்தியா (DIGITAL INDIA)” ஆகிய மூன்றும் வெகுவிரைவில் நிறைவேறிவிடும். பிறகு இந்தியா வல்லரசாவதை எவராலும் தடுக்க முடியாது.

(மனப்பயிற்சியில்) மனம் முழுமையாக விழிப்புணர்வில் இருப்பதால், எல்லாவகையான அபத்தங்களும் முடிவுறுகின்றன. முழுமையான விழிப்புணர்வில் இருக்கும் மனம், ஆனந்தமயமானது.”
நன்றி. மகான் ஜே.கிருஷ்ணமூர்த்தி வசந்த இதழ், சூன்-செப்டம்பர், 2014, ஜேகே பவுண்டேசன் வெளியிடும் காலாண்டு இதழ்.

தினமும் யோகா பயிற்சி செய்தால், மனமும் ஒருமைப்படும். ‘நான் என்பதைநாம் என மாற்றும் சக்தி யோகாவுக்கு உள்ளது. தினமும் யோகா பயிற்சி செய்பவன் என்பதால், இதை அனுபவபூர்வமாகச் சொல்கிறேன். அனைவரும் யோகா பயிற்சி செய்தால் சமூகத்தில் ஒற்றுமையும் அமைதியும் வலுப்படும்.
இவ்வாறு இந்தியப் பிரதமர் மோடி பேசினார்.
நன்றி: தினமலர் தேதி:3-3-2017

1.             இரட்டை மருத்துவமான (Twin Medicine) வாழும் தாய் மருத்துவத்தையும் (Living Mother Medicine-LMM), மருத்துவ மனப்பயிற்சி மருத்துவத்தையும் (Medicine of Medicinal Meditation-MMM) மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும். அனைத்து மருத்துவ மனைகளிலும் மக்களுக்கு அம்மருத்துவத்தின் மூலம் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அம்மருத்துவத்தில் ஆன்மீகமும் இருக்கிறது; மருத்துவமும் இருக்கிறது. அதில் சிகிச்சை பெறும் மக்கள் முழு உடல்மன நலம் பெருவார்கள்; கவனவாழ்க்கைக்கு மாறி வளமான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள்ஆன்மீகப்பலன்களைப் பெறுவார்கள். மக்கள் செய்யும் தவறுகள் குறையும்; தீய எண்ணங்களும் குறையும், தெளிந்த சிந்தனையில் புதியனவைகள் கண்டுபிடிப்பார்கள்; வாழ்க்கைத்தரமும் அதிகரிக்கும்; இயற்கை ஒத்துழைப்புக்கு வந்துவிடும்; வானம் மும்மாரி மழைபெய்யும்; விவசாயம் தழைத்தோங்கும்; உற்பத்தி பெருகும். இந்தியா வளர்ந்த வல்லரசாக மாறும்.
.              
                  கவனவாழ்க்கை வாழுக! வளர்க வளமுடன்!


 Healer, Medicinal Meditation Expert, Er.R.A.Bharaman BE.,FRHS.,RMP(AM).,DAcu, former Superintending Engineer, Tamil Nadu Electricity Board. Cell:+91 9442035291;+91 7092209028 Please visit my website www.medicineliving.blogspot.com; email: twinmedicine@gmail.com Copyright to R.A.Bharaman alias Aromani 
 Updated:03-11-2016; 22-8-2017

No comments:

Post a Comment